
நேற்று கொஞ்ச நாள் கழிச்சு, என்னோட ஒரு பழைய மெயில் ஐடி ஒண்ணு இருக்கே, லாகின் பண்ணி மெயில் செக் பண்ணலாம்னு பண்ணேன்.
அதற்கு இன்னும் பார்வர்ட் மெயில் அனுப்பும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்த போது நன்றாக இருந்தது. அது போகட்டும்! இப்போ மேட்டர் அதுவல்ல....
என் இன்பாக்ஸில் , "Raavan - Unfortunaltely the climax revealed" என்ற சப்ஜெக்டோடு ஒரு மெயில் இருந்தது! ஆர்வமாய் படிக்க ஆரம்பித்தேன்.............................
...
அதன் கிளைமாக்ஸ் என்னவென்றால்................................
"ராவணன்" என்றொரு ஆளே கிடையாது என்பது தான்....

அதாவது பீரா / வீரா (அபிஷேக் / விக்ரம் ) என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் ஆகும்.
ராகினி (ஐஸ்வர்யா ராய்), ஒரு நடன/இசை பயிற்சியாளர். சிறு வயது முதல் நிறைய கற்பனை கதைகளால் வளர்க்கப்பட்டவள் அவள்.அவளுடைய கணவன் தேவ் (விக்ரம் - ஹிந்தி , ப்ரித்வி - தமிழ் ). தேவ் ஒரு போலீஸ் அதிகாரி. அவன் பீரா/வீரா எனப்படுகிற 'ராபின் ஹூட்' போன்ற யாருமே பார்த்திராத ஒருவனை தேடி காட்டுக்குள் செல்கிறான்.
தேவ் , வீராவை பற்றி சொல்லும் கதைகளை கேட்கும் ராகினி, வீராவின் பால் ஈர்க்கப்படுகிறாள். தேவின் கதைகளுக்குள் தன்னை சேர்த்து கொள்கிறாள்.
ஒரு நாள் , வீராவின் தங்கை திருமணம் நடக்கபோகிறது, அங்கே போனால் வீராவை பிடிக்கலாம் என்ற செய்தி வர, தேவ் வீராவை தேடி போகிறான். அங்கே நடக்கும் குழப்பத்தில், அந்த திருமண பெண் 'தேவால்' தவறுதலாக கொல்லபடுகிறாள்.
இங்கிருந்துதான் 'ராமாயணம்' தொடங்குகிறது!
வீரா ராகினியை கடத்த, தேவ் இந்த இருவரையும் தேடி பயணப்பட....
ஒரு கட்டத்தில், வீராவும், ராகினியும் காதல் வசப்பட .........
முடிவில், உணர்ச்சிகரமான கிளைமாக்சில் தேவ் வீராவை கொல்கிறான்....
நிற்க!!
இங்கேதான் மணிரத்னத்தின் விளையாட்டு ஆரம்பிக்கிறது...
இங்கே நடந்த முக்கால் வாசி சம்பவங்கள் "ராகினியின்" கற்பனையே!
அவளுக்கு இருப்பது 'Multiple Personality disorder'. நம் தலைவர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் 'ஒருவர் இன்னொருவராக மாறும் தன்மை, A possession state'.
தன் திருமண வாழ்கையில் பெரிய பிடிப்பேதும் இல்லாத ராகினி தேவ் சொல்லும் கதைகள் மூலம், தன் மூளைக்குள் நடத்தும் கதை களம் தான் 'ராவணன்'.
வீரா தான் என்னை கடத்தி செல்கிறான் என்று, தானாகவே காட்டுக்குள் செல்லும் ராகினியை தேடி போகும் தேவின் பயணம் தான் 'ராவணன்' ஆக படமாக்கபட்டிருக்கிறது.
முடிவில், பீரா/வீரா என்று ஒரு கதாபாத்திரம் இருக்கிறது (பிரபு - தமிழ் , ரவிகிஷன் - ஹிந்தி). அனால், அது ராகினி நினைக்கும் 'ராவணன்' போன்றதொரு'ஹீரோ' இல்லை. ஒரு சாதாரண கிரிமினல்!!
ஹ்ம்ம்ம்..........
கதை நன்றாகதான் இருக்கிறது, பார்போம் மணி சார் எப்படி இதை விஷுவலாக்கி இருக்கிறார் என்று!!!
நானும் பத்து தலை ராவணனுக்காக காத்து கொண்டிருக்கிறேன்!!!!
டிஸ்கி : இந்த கதை எனக்கு ஒரு மெயிலில் வந்த கதை. தலைப்பு சொல்ற மாதிரி
எந்த அளவு உண்மைனு தெரியல...