Showing posts with label கவிதை சாரல். Show all posts
Showing posts with label கவிதை சாரல். Show all posts

Monday, October 6, 2008

வாழ்ந்து கெட்டவனின் வீடு

இன்று ஏனோ கவிதை எழுதும் எண்ணம் எனக்கு. திரு.எஸ்.ராமகிருஷ்ணன்அவர்களின் 'கதாவிலாசம்' புத்தகத்தை படித்துக்கொண்டிருக்கும் பொழுதுஎழுதியது. ஓர் வாழ்ந்து கெட்டவனின் வீட்டைப்பற்றிய ஒரு பதிவு.

படியிறங்கும்
ஊஞ்சலைப்பார்த்து
கை
யசைக்கிறது!
வாழ்ந்து கெட்டவனின்
வீடு!

கொத்தித்தின்ன
அரிசி இல்லையாம்!
முறத்தை சபித்தன
குருவிகள்...

கூந்தல் உலரவைக்கும்
பெண்களை காணோம்!
மாடத்தில் கொஞ்சம்
வெயில் மட்டும்
மிச்சமிருந்தது!

வேலையினின்று திரும்பும்
நகரத்துப் பெண் போல
களையின்றி நின்றது
கோலமில்லா வீடு !


முற்கால பெருமைகளை மட்டும்
சுமந்து நின்று கொண்டிருக்கிறது
மனிதர் இல்லா திண்ணை !