
வானத்தை தொட்டு கொண்டிருக்கும் கட்டிடத்தின் எட்டாவது மாடியில் மறைந்திருக்கும் அந்த மென் பொருள் நிறுவனத்தின் உள்ளே உள்ள ஆறாவது சதுரகத்தில்(Cubicle) அமர்ந்திருந்தான் சாகர். கல்லூரி கடந்த பின், இரண்டு வருடங்கள், ஜாவாவோடு கழித்து, அயல் நாட்டு கலாச்சாரங்கள் கற்று கொண்டு, சரி வர உணவு, தூக்கம் இல்லாமல் வேலை செய்யும் அவன் எல்லோரையும் போல் ஒரு மென் பொறியாளன். என்னதான் செய்தாலும், தனக்கான அங்கீகாரம் கிடைக்க வில்லை என்று பெருமூச்சை எய்தி கொண்டு, எதிர்பார்த்த வெளியீடு(Output) வராது என்று தெரிந்த பிறகும், தன் ஜாவா இயக்க திட்ட செயலாக்கதோடு(Program) போராடி கொண்டிருந்தான்.
"சாகர், கம் டு மீ". குரல் கேட்டு திரும்பினான் சாகர். அவனது பதிலுக்கு காத்திராமல், வேகமாய் போய் கொண்டிருந்தார் கோபாலன் ராதாகிருஷ்ணன். அவனது பணித்திட்ட மேலாளர்(Project Manager).
"என்ன சொல்ல போகிறாரோ?", இருக்கையை விட்டு எழுந்து சென்றான் சாகர்.
"கோபால், மே ஐ..?", மடிக்கணினியில் இருந்து தலை தூக்கினார் கோபாலன்.
"எஸ் சாகர்,சிட், "அவருக்கு எதிரான அந்த சுழல் நாற்காலியில் அமர்வதற்கே அவனுக்கு பிடிக்காது. அமர்ந்து கொண்டான்.
"சாகர், ஹோப் யு நோ திஸ். அவர் அக்கௌன்ட் இஸ் நாட் டூயிங் குட். வி ஃபெய்ல்ட் டு டெலிவர் சம் ஆப் தி டெலிவரபில்ஸ் அட் டைம்". கோபாலன், சுத்த தமிழராய் இருந்தாலும், கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதில் வரும்.
"பய் திஸ் டைம், வி ரிக்வயர் அக்க்ரசிவ் ப்ளான்ஸ் டு பி இன் ப்ளேஸ் அண்ட் யு கைஸ் ஷுட் பி மோர் ப்ரோடக்டிவ் தென் பிஃபொர், பட் ஐ அம் நாட் சீயிங் எக்ஸ்பெக்டட் பர்பார்மன்ஸ் ப்ரம் யு". அமைதியாக இருந்தான் சாகர். " ஆப்டர் டூ பிளஸ் ஈர்ஸ் ஆப் எக்ஸ்பீரியன்ஸ், திஸ் இஸ் நாட் எக்ஸ்பெக்டட் ஃப்ரம் யு. ஈவன் கய்ஸ் வித் லெஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஆர் டூயிங்க் பெட்டர் தேன் யு". சாகருக்கு எரிச்சலாய் வந்தது.அந்த எரிச்சலை ரசித்த கோபாலன், "சாகர், லெட் மி டெல் யு திஸ், வென் ஐ வாஸ் லைக் யு,இஃப் ஐ ஃபெய்ல்ட் டு கம்ப்ளீட் மை டாஸ்க்ஸ், ஐ வாஸ் ஃபீலிங்க் அஷெம்ட் டு லுக் அட் மை பாஸ்!. யு கய்ஸ் ஷுட் பி லைக் தட்!",
"நான் போகலாமா?" என்ற பார்வையோடு கோபாலனை பார்த்தான் சாகர். இரு கை விரல்களையும் கோர்த்து கொண்டு, அவன் கண்களயே உற்று பார்த்துக்கொண்டிருந்தார் கோபாலன். போதாக்குறைக்கு எய்ன்ஸ்டெய்ன் ரிலேடிவிடி தியரி வேறு சாகருக்கு நினைவுக்கு வந்தது, Put your hand on a hot stove for a minute, and it seems like an hour. Sit with a pretty girl........................... ".
"வெல், சாகர், ஐ அம் நாட் இம்ப்ர்ஸ்ட்..ஹோப் யு நோ PR (Performance Review) இஸ் ஆன் தி வே! ", மேலாளர்களுக்கு என்று ஒரு தனி சிரிப்பு இருக்கும், அப்படி சிரித்தார்.
இருக்கையில் இருந்து எழுந்து கொண்டான் சாகர். அந்த கணிணி முன்னால் போய் உட்காரவே அவனுக்கு பிடிக்கவில்லை. வீட்டு நினைப்பு வந்தது. அடுத்த சதுரகத்தில் இருக்கும் சல்மா தலையை சிலுப்பிக்கொண்டு கேட்டாள், "சாகர், யெனிதிங்க் ராங்க்?", "நதிங்க், சல்மா...., ஐ அம் ஓகே,", பொய் சொன்னான்.
அடுத்த இரண்டு வாரங்கள் சாகருக்கு நரகமாய் கழிந்தது.நிறைய கேள்விகள், நிறைய உதடு பிதுக்கல்கள்,நிறைய தன்னிலை விளக்கங்கள். அடுத்தது என்ன, என்று நினைத்து கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் சாகருக்கு அந்த மின்னஞ்சல் வந்தது.
Dear Saagar Sundaramoorthy,
We regret to inform you that your employment with TetraLogica Systems shall be terminated on October 8th, 2008, for the following reasons:
1. Poor performance
2. Failure in executing recovery plans
3. Inability (or unwillingness) to follow directions
Severance payments shall be made in accordance with company policy. I recommend that you being to plan for your future insurance needs because the firm shall not maintain insurance coverage for you beyond the date of termination.
Please arrange to return any company property that is in your possession.
Although we regret the situation, this act is compulsory.
Respectfully,
XXXXXXXXXXX
தலை சுற்றிகொண்டு வந்தது. கால்கள் தடதடத்தன. அதற்குள் கழுத்தை சுற்றி இருந்த அடையாள அட்டை பிடுங்கப்பட்டிருந்தது.
சில, பல மாதங்கள் கழித்து.....................
அந்த கட்டிடத்தின் தலையில் "ரிவேரா" என்று நியான் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. தொடை தெரிய பெண்களுமாய், கருப்பு உடை அணிந்த ஆண்களுமாய், திரவக்கோப்பை சிதறல்களுமாய் அரங்கம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது."Let's rock the party!!!" டி.ஜே கூவிக்கொண்டிருந்தான். அரையிருட்டில் ஒளி, கதிர்களாய் படர விடப்பட்டிருந்தது. இரண்டு ஷாட் டகிலாவும், சில லார்ஜ் பகார்டியும் உள்ளே போன காரணத்தினால், கோபாலன் சற்று நிலை தடுமாறி இருந்தார். அவருடைய பளேசர் வியர்வையில் நனைந்திருந்தது. தட்டு தடுமாறி வாகன நிறுத்துமிடத்திற்கு வந்து தன் சிற்றூர்ந்தின்(Car) கதவினை திறந்து உள்ளே உட்கார்ந்தார். சாலையில் தவழ்ந்து இறங்கி சீரான வேகத்தில் வண்டி சென்று கொண்டிருந்தது. சாலையில் வரும் வாகனங்களின் வெளிச்சம் கோபாலனின் கண்களை கூசியது. தன் இடது கையை தூக்கி வண்டியின் கண்ணாடியை சரி செய்தார். அந்த கண்ணாடியில்........ பின் இருக்கையில் இருந்து எழுந்த அந்த உருவத்தின் பிம்பம் நிழலாடியது.
"சா...க... ர்...", கோபாலன் முகம் முழுவதுமாய் வியர்த்திருந்தது.
"சும்மா, உங்கள பத்திரமா வீட்ல விடலாம்னுதான்" . முதன்முறையாக கோபாலனிடம் தமிழில் பேசினான்.
"நோ...நோ.....!".கடைவாயில் விழுந்த அடியில் கோபாலன் மயங்கி இருந்தார்.
மீண்டும் அரையிருட்டு.வெள்ளை நிற மேல் உள்ளங்கியில் கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இருந்தார் கோபாலன். லேசான மயக்கம். இருக்கும் இடம் என்னவென்று தெரியவில்லை. அவர் உட்கார்ந்திருந்த அந்த நாற்காலி மின்கம்பிகளால் அங்கிருந்த கணிணியோடு இணைக்கப்பட்டிருந்தது. தான் எங்கிருக்கிறோம் என்று புரியவே கோபாலனுக்கு நேரம் தேவைப்பட்டது. அது ஏதோ ஒரு கட்டிடத்தின் அடித்தளம் போல இருந்தது. சாளரங்கள்(Window) எங்கேயும் காணப்படவில்லை.
"நா.. நான் எங்க இருக்கேன்??"
"கவலைப்படாதீங்க! நல்லாத்தான் இருக்கீங்க.... இந்த நிமிஷம் வரைக்கும்!", கையில் கத்தியுடன் நிற்கும் சாகரின் உருவம் இருட்டாய் தெரிந்தது.
"சாகர்.. யு பாஸ்டர்ட்..." . சிரித்தான் சாகர்.
"சத்தம் போட்டா இங்க வேலைக்கு ஆவாது கோபாலன்"
"சா... சாகர்.. டேக் ஆல் மை மனி....., லீவ் மி சாகர்... ப்லீஸ்!"
"அடடா.... உங்க பணத்துக்காக உங்கள கடத்தினேனு நெனைக்கறீங்களா?, யு ஆர் அப்சலூட்லி ராங்க் மிஸ்டெர் ராதாகிருஷ்ணன்!"
குழப்பக்குறிகள் கோபாலனின் முகத்தில் வட்டமிட்டன.
"வாட் இஸ் யுவர் எக்ஸ்பீரியன்ஸ் கோபாலன்?" - சாகர்.
"வ்வாட்??"
கோபாலனின் முகத்தை நோக்கி குனிந்தான் சாகர். அவன் கண்கள் சிவப்பாய் பளபளத்தன.
"ஐ செட், வாட் இஸ் யுவர் ஃபக்கிங்க் எக்ஸ்பீரியன்ஸ் இன் திஸ் ப்ளடி ஐ டி இண்டஸ்ட்ரி"?
"ஃபிஃப்... ஃபிஃப்டீன் ஈர்ஸ்..."
"ஹௌ மனி க்ய்ஸ் யு ஹவ் ஸேக்ட் (Sacked) இன் திஸ் ஃபிஃப்டீன் ஈர்ஸ்?"
"சாக்.. சாகர்... அண்டர்ஸ்டாண்ட்... தட் வாஸ் நாட் மை டெசிஷன்.. தட்.. தட்.. வாஸ் மேனேஜ்மெண்ட்ஸ் டெசிஷன், ஐ நெவெர் தாட் ஆஃப் சென்டிங்க் யு அவுட்..!"
"என்ன கேட்டேனோ அதுக்கு பதில்...,", கத்தியின் அழுத்ததில் கோபாலனின் கன்னத்தில் இருந்து ரத்தம் கோடாய் வழிந்தது.
"மே.. மே பி.... 25 " , கோபாலனின் குரல் படபடத்தது.
"ஓ.... மே பி... 25, குட் ஆன்ஸர் கோபாலன், அவங்க எல்லாம் அதுக்கு அப்புறம் என்ன ஆனாங்கனு தெரியுமா?" - சாகர்.
"ஐ... ஐ டோண்ட் நோ சாகர்...". அழுதார் கோபாலன். "யு கெட் ஃபக்கிங்க் தவுசண்ட்ஸ் ஆஃப் ஜாப்ஸ் , ஈவன் இஃப் ஐ த்ரோ யு அவுட் மேன்.. , ஒய் தி ஹெல் யு ப்ரிங்க் மி ஹியர்?" - அவர் குரல் உடைந்தது.
"எனக்கு கிடைக்கலயே!" - சாகர் குரல் எழுந்ததில் அவர் குரல் அடங்கியது.
"சா.. சாகர், ஐ.. ஐ.. வில் கெட் யு அ ஜாப்...., பிலீவ் மி.. ப்லீஸ்.. லீவ் மி சாகர்... ப்லீஸ்!"
"ஓ!.... தென் வாட் வில் யு பே (Pay) ஃபார் தி திங்க்ஸ் ஐ ஹேவ் லாஸ்ட்?, மை ஹவுஸ் வாஸ் செட் டு ஆக்க்ஷன் (Auction) அஸ் ஐ வாஸ் நாட் ஏபில் டு பே மை டெட்ஸ்(Debt), மை ஃபாதர் பாஸ்ட் அவே(passed away) ஆஃப் திஸ் டிப்ரஷன், வில் யுவர் ஜாப் கெட் ஹிம் பேக்?"
பதிலேதும் தெரியாமல் அமர்ந்திருந்தார் கோபாலன்.
"சில் அவுட் கோபாலன்!! லெட்ஸ் ப்ளே அ கேம் நவ்...." - சாகர்.
அங்கிருந்த மின்சார கம்பிகளை தாண்டி நடந்து அந்த கணிணியை உயிர்ப்பித்தான் சாகர். திரை உயிர் கொண்டு எழுத்துக்கள் தோன்றின.
"கோபாலன், டெல் மி யுவர் ஃபேவரிட் ப்ரொக்ராமிங்க் லாங்குவேஜ்?" - சாகர்.
"எ.. எதுக்கு?"
"ஓகே, ஐ வில் கிவ் யு சாய்சஸ், 1.ஜாவா ஆர் 2.யுனிக்ஸ் ஸ்க்ரிப்ட், டெல் மி"
"ஜா.. ஜாவா...", தடுமாறி சொன்னார் கோபாலன்.
"ஓகே, இந்த 'ஜாவா'தான் இப்போ உன் உயிர் குடிக்க போற எமன்!, எஸ்...... திஸ் லாங்குவேஜ் இஸ் கோயிங்க் டு கில் யு", அடித்தளம் அதிரும்படி சிரித்தான் சாகர்.
"கோபாலன், ஐ பில்ட் திஸ் இண்டர்ஃபேஸ், நான் எழுதிருக்குற இந்த 'ஜாவா' கோட(Code) ரன் பண்ண உடனே, நேரம் என்டெர் பண்ண சொல்லி கேக்கும். நான் குடுக்க போற அந்த நேரம்தான், நீ இந்த உலகத்துல வாழப்போற கடைசி நொடிகள்!, ஏன்னா, அந்த நேரம் முடிஞ்ச அப்பறம், இந்த 'ஜாவா' ப்ரோக்ராம், இதோ..... இங்க இருக்கற 'எலக்ட்ரிக் சர்க்யூட்ட' 'ஆன்' பண்ணும்.
ஜஸ்ட் இமேஜின்.. 4000 வாட் பவர் உன் மூளைக்குள்ள இருக்கற ஒவ்வொரு நியூரானுக்கும் பாயப்போறத......" - சாகரின் கண்களில் குரூரம் மின்னியது.
"சாகர்..யு.. யு ஆர் நாட் டூயிங்க் திஸ் டு மி... சாகர்.. ப்லீஸ்... முட்டாள்தனமா எதுவும் பண்ணாத... ப்லீஸ்...."
C:/> javac KillGopalan.java
C:/> java KillGopalan
Enter the time in seconds: 100
Count Thread Starts.....
Gopalan is going to die in : 99
Gopalan is going to die in : 98
............................
............................
அந்த எலக்ட்ரிக் சர்க்யூட், தன்னிடம் உள்ள சிகப்பு விளக்கை எரித்து, எரித்து காட்டிக்கொண்டிருந்தது.
கோபாலனின் நாக்கு வரண்டு போனது. வியர்வையில் உடல் முழுவதுமாய் நனைந்திருந்தது. உடல் திமிறிக்கொண்டிருந்தது. தன்னை நோக்கி வரும் மரணத்தை கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தார்.
"சா..சா..கர்... எ.. என்ன விட்டு.... "
Gopalan is going to die in : 04
Gopalan is going to die in : 03
Gopalan is going to die in : 02
Gopalan is going to die in : 01
.....................................................................................
[ERROR] : Failed to establish connection to the hardware device.
"வ்வாட்ட் தி ஃப............??????" , வெறியோடும், குழப்பதோடும் தன் 'ஜாவா' இயக்கத்திட்ட செயலாக்கத்தை 'பழுது' (Debug) பார்ப்பதில் ஆழ்ந்தான் சாகர்.
கோபாலன் சற்று நேரம் ஆசுவாச பெருமூச்சு விட்டார் !
4 comments:
ஒரு வழியா எழுதிட்ட... உன் டி.எல் மேல உனக்கு இவ்ளோ கொல வெறியா?
அப்புறம், அருமையான நடை... பெர்ஃபெக்ட் வசனங்கள்... குட் டைம் டு கெட் எஸ்.எல்.ஆர்... :) :) :)
நல்ல நடை :)
//டி.எல் மேல உனக்கு இவ்ளோ கொல வெறியா? //
அதானே?
அருமையான நடை ...
வசனங்கள் அருமை, கதையின் இறுதி சூப்பர்....
Post a Comment