Tuesday, May 12, 2009

அம்மா என்றழைக்காத !



போன ஞாயிற்றுகிழமை காரில் போய் கொண்டிருந்தேன். அன்னையர் தினம் என்று எனக்கு நினைவே இல்லை. FM இல் "அம்மா" பாடல்களாகபோட்டு கொண்டிருந்தார்கள். அம்மா பாட்டு என்றால் அதிமுக பிரசார பாடல்கள் அல்ல! "அம்மா" பாட்டு, அவ்ளோதான்!

அப்போது
, அன்னையர் தின வாழ்த்து சொல்ல சாலமன் பாப்பையா பேசினார்.
"எங்க அம்மா என்னைய எப்பவுமே திட்டிடே இருக்கும். எது நான் செஞ்சாலும், பாராட்டவே மாட்டாங்க! கெளவி ஏன் இப்படி செய்யுது
னு நான் நெனப்பேன். ஆனா, என்னைய பத்தி மத்த ஆளுகளுங்க கிட்ட பெருமையா பேசும். அவிக சொல்றது கேட்டு சந்தோச படுமாம். அந்த ஆளுக சொல்ல நான் கேட்டுருக்கேன். படிப்பறிவு இல்லாத பொம்பளைக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சுனு தெரியல. எங்க தன் பையன் பெரும பேசுனா தலைகனம் ஏறிடும்னுதான், இந்த மனுசி பேசலயோ என்னவோ,", அவர் வட்டார வழக்கில் பேச பேச , எனக்கு லேசாய் என் அம்மா ஞாபகம் வந்தது. ஆனால் என் அம்மா , நான் சிரித்தால் சிரிப்பாள், நான் அழுதால் அழுவாள். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது, ஸ்கூலில் படிக்கும் போது. நான் எந்த போட்டியில் பங்கு பெற்றாலும், என் அம்மா அங்கே இருக்க வேண்டும். அதுவும், ஆரஞ்சு புடவையில் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் வேண்டும் என்றே தோற்று விடுவேன். இதற்காகவே, என் அம்மா வருவாள். என்னை பார்த்த படியே பெருமையாய் அமர்ந்திருப்பாள்.

எங்கோ
படித்த ஞாபகம், "அம்மாவை கடவுளாக பார்க்கலாமா?". பதில், இவ்வாறாக இருந்தது." அம்மா என்பவள் முதன்மையாக அன்பு செலுத்தவேண்டிய ஜீவனே அன்றி , கடவுள் அல்ல" என்று.

என் பார்வையில், இதற்கொரு சிறிய விளக்கம். ஆணின் உயிர்த்துளியை தாங்கி, நம் கண், காது, இதயம், பிறப்புறுப்பு , இன்ன பிற இத்யாதிகள் உருவாக துணைபுரிந்து, ஈன்றெடுத்து, படைப்பின் மொத்த சாராம்சமாய் விளங்குபவள் அம்மா! அவள் மீது அன்பு செலுத்துதல் என்று சுலபமாய் சொல்லி விட்டு போக முடியாது.
உன் வீட்டு நாய்க்கு கூடத்தான் நீ அன்பு செலுத்தலாம். ஆனால் ? அம்மா ?

உன்னை உருவாக்கியவளை, நீ உன் காலில் நிற்கும் வரை பாதுகாத்தவளை, அன்பு மட்டும் செலுத்தினால் போதாது. உன்னை கண்ணாய்பார்த்துகொண்டவளை, நீ கண்ணாடியாயாவது பார்த்துக்கொள்ள வேண்டாமா ?

முடிந்த
வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !



Saturday, May 9, 2009

புலனடக்கம்


என்ன அநியாயம்யா இது, ஓட்டு போட பணம் குடுத்துட்டு, நீ எனக்கு தான் ஓட்டு போடணும்னு மிரட்டறானுங்க!, இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார் !

எப்படி புஷ் , சதாம் உசேன தூக்குல போட்டரோ, அந்த மாதிரி ஒபாமா வந்து இவனுங்கள புடிச்சி தூக்குல போடணும் !

இப்ப பாத்தீங்கன்னா , அந்த காலத்துல சிவாஜி கூட நின்னாரு, எம்ஜார எதுத்து ஒரு ஓட்டு வாங்க முடிஞ்சுதா? அதுக்கு எல்லாம் , நல்ல மனசு வேணும்ங்க! இப்ப பாருங்க இந்த விஜயகாந்த், இவன்லாம் என்ன பண்ண போறான் ? பத்து எடத்துல நின்னு தோத்துத்தான் போக போறோம் னு தெரிஞ்சும், ஒண்ணு, ரெண்டு ஓட்டுக்காக எதுக்கு நிக்கணும்ங்கறேன்?

பஸ்ஸு டிகெட்டு விலைய இவனுங்க பாட்டுக்கு ஏத்திடறானுங்க , காய் கறி வெலையெல்லாம் தாறுமாறா ஏறுது! என்ன நடக்குது சார் இங்க ? இந்த கருணாநிதி ஆட்சிலாம் ஆட்சியா ?

நிறுத்துக..........

இதெல்லாம் நான் கேட்டது சென்னை மாநகர பேருந்து ஒன்றில்.

அய்யா, அரசியல் பேசும் புண்ணியவான்களே! நீங்கள் உங்கள் நண்பர் ஜமாவிலோ, அல்லது உங்களுகென்று இருக்கும் விவாத கூட்டத்திலோ இதெல்லாம் பேசுங்கள்! மக்கள் கூடும் பொது இடங்களில் வேண்டாமே ப்ளீஸ்! உங்கள் கருத்தை ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தால், பிரச்சனை இல்லை, மாற்று கருத்து கொண்டவர் உங்களுடன் பயணம் செய்தால் ??

அதனால், இடம் பொருள் ஏவல் அறிந்து அரசியல் பேசவும் . இது தேர்தல் சீசன் வேறு! வருகிறவன் போகிறவன் எல்லாம் அடிப்பான். கடைசியில் வடிவேல் மாதிரி 'அம்மே , அம்மே !' என்று முனகி கொண்டிருக்க வேண்டியதுதான்!


சந்தேக சதாசிவம் : எல்லாம் சரி! ஒபாமாவுக்கும் நம்மூர் உள்ளூர் தேர்தலுக்கும்
என்ன சம்பந்தம்? அவர எல்லாம் கூட்டிட்டு வந்து எதுக்கு இதுக்குள்ள இழுக்கணும்?

Friday, May 8, 2009

கைப்புள்ள !!!

நம்மாட்களில் பல பேர் இப்படித்தான்.. பத்து பேர் கூட இருந்தால் என்ன ஏது என்று கேட்காமல் கூட, "தட்னா தாராய்டுவ" என்று டயலாக் பேசுவார்கள். அவர்கள் உண்மையில் எப்படி என்றால் இப்படித்தான்!!!



இந்த வீர செயலின் விளைவு தெரியுமா ????


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.................................................... இங்கே ..............................................................


என்னா அடி!! பில்டிங் ஸ்ட்ராங்!! பேஸ்மென்ட் வீக் !!

இப்படி உசுபேத்தி , உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடீங்களே டா !

இதை பார்த்து சிரித்து கொண்டாலும், விளையாட வேண்டிய வயது
வன்முறையில் இறங்குவதை பார்த்தால் நெஞ்சு பதறுகிறது!!

சிரித்து விட்டு சிந்தியுங்கள் !!




கற்றது காதல் அளவு - யௌவன கதைகள் - 1




"
நீது ! ஐ லவ் யூ! "....

"
வ்வ்வாட்" என்றது பிங்க் நிற டாப்ஸில் இருந்த அந்த தேவதை.

"
ஐ செட், ஐ லவ் யூ !", நிறுத்தி நிதானமாய் சொன்னேன். "ஷட் அப் , ஆதித்", , அலட்சிய புன்னகை உதிர்த்தாள்.

"
ரியல்லி நீது! ஐ அம் இன் லவ் வித் யூ .... உன் கூட இருந்தா மனசுக்குள்ள மழை பெய்யற மாதிரி ஒரு பீல், நீ என் கூட இருந்தா, I feel Blessed! Infact, உன்ன லவ் பண்ணனும் அப்டிங்கற சுயநலத்துனால தான், உன் கூட பேச ஆரம்பிச்சேன்! தப்பா, ரைட்டா னு எனக்கு தெரியல நீது..... வில் யூ லவ் மீ ?

அந்த ரோஜா முகம், மேலும் சிவப்பு வண்ணங்களை பூசி கொண்டு கோபம் காட்டியது!

"
ஐ நெவெர் எக்ஸ்பெக்டெட் திஸ் ஆதித்!", ஐ அம் கோயிங்! - என் பதிலுக்கு காத்திராமல் , கிளம்பி போய் விட்டாள். பில் கொடுக்க பணம் இருக்கா என்றெல்லாம் கேட்க வில்லை !!

"
ச்சே, அவசர பட்டுட்டியேடா !!"

-------------------------------------------------------------------

"
நீ ஏன் சொன்ன ? நீதுக்கு தான் 'லவ்' னாலே பிடிக்காதுன்னு உனக்கு தெரியாதா?"

"
இல்ல ப்ரியா, எவ்ளோ நாள் தான் சொல்லாமலே இருக்க முடியும்?, அவள நான் சின்சியரா லவ் பண்றேன் . உனக்கு தெரியாதா?"

"
தெரியும் டா, ஆனா எத்தன பேர் அவ கிட்ட ப்ரபோஸ் பண்ணிருக்காங்க, யாரையும் அக்செப்ட் பண்ணல.. தெரியுமா ?"

"
அதெல்லாம் எனகெதுக்கு, நான் அவள லவ் பண்றேன், நீ தான் ஹெல்ப் பண்ணனும் ப்ரியா"

கெய்த் பீட்டர்ஸின் "கிடாரை" போல், வளைந்த இடை! திராட்சை கண்களில், படபடக்கும் இமைகள்! சகூரா மலர்களை கொண்டு சமைத்த பெண்மை ! அவள் பேச ஆரம்பித்தால், "மொராக்கோ " ரய் இசை எல்லாம் தோற்று விடும்! பெண்ணழகின் ஒட்டு மொத்த பிரதிநிதி இவள்தான் என்று சொல்லும் அளவுக்கு ஒருத்தி இருந்தால் எவனுக்கு தான் காதல் வராது?

"
ட்ரை பண்றேன் டா ", ப்ரியா .

---------------------------------------------------------------------

"If I had to live, my life without you near me,... The Days would all be empty"

செல்போனில் ஜார்ஜ் பென்சன் பாடிகொண்டிருந்தார். நீதுவை காதலிக்க ஆரம்பித்த பிறகு நான் வைத்துக்கொண்ட டோன். எடுத்து பார்த்தேன்!

"
ப்ரியா காலிங் "....

"
உடனே பெசன்ட் நகர் பீச்சுக்கு வா ", உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் "

-------------------------------------------------------------------

கடற்கரை எப்போதும் போலவே , அழகாய் இருந்தது.

"
சொல்லு ப்ரியா, பேசணும்னு சொன்ன ?"

"
இல்ல டா .. நீ இதை எப்படி எடுத்துப்பனு தெரியல , அதான்",

"
சும்மா சொல்லு ", இது நான்.

"
நீதுக்கு எங்கேஜ்மென்ட், பையன் ஸ்டேட்ஸ்ல டாக்டரா இருக்கான்! "

அலைகளின் சத்தம் இப்போது பெரிதாய் கேட்டது! ஒரு பதினைந்து நிமிட மௌனம்! இனம் புரியாத இறுக்கம்!

தோளை தொட்டாள் ப்ரியா. "ஆதி, நீ எப்படி பீல் பண்ணுவனு எனக்கு புரியுது, ஆனா நீ கொஞ்சம் உக்காந்து யோசிச்சு பாரு, இது ஒன் சைடட் லவ்! இப்ப நம்ம மெடிசின் படிக்க ட்ரை பண்றோம், கிடைக்கல! இன்னொரு ட்ரை பண்றோம், அப்பவும் கிடைக்கல! அப்புறம், இருக்கற நல்ல மார்க்ஸ வச்சிக்கிட்டு வேற நல்ல கோர்ஸ் படிக்கிறது இல்லையா? , லைப் ல நெறைய "Choices" இருக்கு ஆதி! நம்ம எப்படி அதை "ஆப்ட்" பண்ணிகறோம் , அப்படிங்கறது தான் விஷயம்! எப்பவும் அடுத்தது என்னனு யோசிக்க ஆரம்பிச்சுட்டா , லைப் ரொம்ப நல்லா இருக்கும். பைத்தியக்கார தனமா எதுவும் யோசிக்காம, நல்லா அமைதியா உக்காந்து யோசிச்சு பாரு"

ப்ரியா எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளையே பார்த்து கொண்டிருந்தேன். இப்பொழுது ப்ரியா மிகவும் அழகாய் தெரிந்தாள்.

இனிமேல் ஜார்ஜ் பென்சன் இவளுக்காக பாடுவார்!