இன்று இந்த தலைப்பில் எழுத காரணம் சென்ற வாரம் நான் படித்த ஒரு கவிதை. அந்த வரிகள் எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் அந்த கவிஞர் வருத்தபட்டிருந்தார். அதாவது இனிமேலும் வண்ணத்து பூச்சிகளையும் விதவைபெண்களையும் விட்டு விட்டு கவிதை எழுதுங்கள் என்று. இதை நினைத்துபார்க்கும்போது நிறைய கவிஞர்கள் (!!) மற்றும் கிறுக்குபவர்கள், ஒருவட்டத்திற்குள்ளேயே அடைந்து கிடைக்கிறார்கள் என்றே எண்ண தோன்றுகிறது. "நீ கல்லானால் நான் உளி, நீ காற்றனல் நான் இலை" என்றே இன்னும்எழுதிகொண்டிருந்தால் புதுக்கவிதை இன்று பெற்றுள்ள பரிமாணம் வளராது என்றும் எண்ண தோன்றுகிறது. நான் உவமைகளுக்கு, உருவகங்களுக்கு எதிரிஅல்ல. ஆனால் நல்ல கவிதை என்பது அழகான வரிகளில் மட்டும் இல்லை. ஆழமான கருத்துக்களில் உள்ளது. கவிதை என்பது காதலுக்காக மட்டும் அல்ல என்பது ஏனோ பலருக்கு புரிவதில்லை. கவிதை என்றால் நிலா இருக்கவேண்டும், அது பெண்ணை பற்றியதாகவே இருக்க வேண்டும் என்றே சிலர் நினைக்கின்றனர். இந்த வட்டத்தை விட்டு வெளியே வருபவர்கள், சமூகத்தைஅதன் வாழ்வியலை திறந்த கண்ணோடு பார்க்கிறவர்கள் சிறந்த கவிஞர்களாக உருவெடுக்கிறார்கள். அந்த வரிசையில் பலர் இன்று வந்துகொண்டிருந்தாலும், கவிதைகளை பற்றிய கண்ணோட்டம் அனைவருக்கும் மாறவேண்டும் என்பது என் விருப்பம். இந்த விருப்பம் நிறைவேறுமா என்று தெரியவில்லை. அதற்குமுன், இந்த தலைப்பை நீ எப்படி தேர்ந்தெடுக்கலாம் என்று என்னை கேள்விகேட்பது போல் அமைந்த ஒரு கவிதை. சென்ற வார ஆனந்த விகடனில் வெளியாகி இருக்கிறது. ஜெயராணி என்றொரு கவிஞர் 'பெண்கள் பூப்பைதுவதைபற்றி' எழுதியது. இதை படித்தபோது எனக்கே அடி வயிறு வலித்தது. அவர்களதுஅனுமதி இல்லாமல் நான் அதை இங்கே வெளிடுவதற்கு, நான் என் வழக்கறிஞரின் பின்னால் ஓட வேண்டி இருக்காது என்றே நினைக்கிறேன். அதைபாராட்டாமல் போக மனமில்லை. இதோ அந்த கவிதை...
முதல் குருதி...
ஆழ் உறக்கத்தில் பயமுணர்ந்து
உதிரம் கண்ட இரவில் தொடங்கியது
எல்லா துயரங்களுக்கான சாத்தியங்களும்
பயிற்றுவிக்கப்படாத.
முன்னறிவிப்பிலாத
முதல் மாதவிலக்கு..
காயமேதுமற்று உடலில் கண்ட
முதல் குருதி..
குழந்தைமையை நொறுக்கி
சிறு பூச்சிகளென பறக்கவிட்டது
உடல் முழுக்க பரவிக்கிடந்த
அயர்ச்சியும்
குடைந்த கால்களின் தனித்துயரும்
அடி வயிற்றின் பெரு அலறலும்
கன்றிப்போய் வலி தந்த மார்பும்
சேர்ந்த மனச்சோர்வும்
பிரவாகமெடுத்த கோபமும்
பீறிட்ட உதிரமும்
தனிச்சிறையில்
ஒளியும் காற்றும், துளி நீருமற்று
மூச்சுதிணறும்
கொடுநிலைக்கு தள்ளின...
புதுத்துணியும் அலங்காரமும்
விருந்தொம்பலேன ஏதும்
முறிக்கவில்லை
உடலில் ஏறிக்கிடந்த
வலிஎனும் நஞ்சை
வழிந்த கண்ணீரை துடைக்க
ஏதில்லாமல்
கைகளை வயிற்றுக்கு முட்டுக்கொடுத்து
குப்புறக்கிடக்கையில்
பாட்டி சொல்கிறாள்..
" இத கூட தாங்கலேனா
அப்புறம் என்ன பொம்பள ?"
இந்த மாதிரி கவிதைகளை படிக்கும்போது நம்மை அறியாமலே ஒரு உணர்வு நம்மை சூழ்ந்து கொள்கிறது. அந்த உணர்வுகள் நிச்சயம் நம் மனத்தை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்கும். இதுதான் ஒரு சிறந்த கவிதைக்கு கிடைக்க கூடிய மிகச்சிறந்த பாராட்டு. அந்த வகையில் ஒரு வாசகனின் மனதைத்தொட்ட கவிஞர் ஜெயராணியின் கவிதைக்கு பாராட்டுக்கள். உங்களின் இந்த கவிதை பயணத்தில் சிகரங்களை தொட வாழ்த்துக்கள்!
நல்ல கவிதைகளின் ரசிகனான எனக்கு, ஒரு கவிதையை பற்றியே எனது முதல் வலைபக்கத்தில் எழுதுவதை நினைத்து எனக்கு மகிழ்ச்சியே !!
3 comments:
Hi surendra,
Ur perspective abt today's "pudhu kavidhai" is too harsh da.sorry to say this i know y u got this type of feelin abt today`s"pudhu kavidhai", its becoz nowadays we get repeated metapors in all cine songs n it has a very much impact on buddin poets. As the time passes away,these poets ll get matured n ll produce quality poems like the one of jayarani. u must remember even jayarani wud hav stared writin wid stereotypical poems at her earlier's days.dont worry buddy the one who r writin or scribbling(as u call:)) today, ll write good poems tomo.
wat do u say??
kadhal mattum yen ezhulunduraanga na keta nan sollum padhil , palarukku kavidhai ezluda vaithatey kadhal taane:):):)
ana adavittu veliya vara vendum enbataiyum marukka mudiyathu.
thai paasam,desa patru,natpu nu neraya iruku,ezhludaradukku.
poruthirundu paarthu padikalam pudhu kavidaigalai.:)
I appreciate ur comment machi.. I have also started with love poems. But I realised there s lots more to write and I started reading books also.Now I'm just experimenting to write something which usually others don't write on it.What I felt was most ameteur writers are writing only on love.I know they are capable of writing on other topics also but I don't know why they are not coming out of that circle.At this point of time you should understand who those "ametuers" are.. like u said now a days the one who wants to write, takes inspiration from cinemas which will never be fruitful at any cost.Unless they have the habit of reading,they can't come out of that circle.I mentioned abt these guys only and I'm not against today's pudhukavithai.
nee ninaipathum nan ninaipathum
nichayam nadanthal
pudhu kavidhaigaluku
vadivam kidaikum
thamizh kavidhaiyin
vazhvu sezhikum!
Post a Comment