இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொருவருக்கும் சில கேள்விகள்....
1. உங்களின் மிக நீண்ட தொலை பேசி அழைப்பு எது ?
2. முகம் தெரியாத ஒரு நபருடன் குறைந்தது அரை மணி நேரம் பேசியதுண்டா?
3. தொலை பேசியில் பேசும்போது போலி சிரிப்பு சிரித்தது உண்டா?
4. உங்களை யாரென்றே தெரியாதவனிடம் திட்டு வாங்கி இருக்கிறீர்களா ?
5. அல்லது பாரட்டேனும் ??
எல்லோராலும் இந்த கேள்விகளுக்கு 'சரியான' முறையில் பதில் சொல்லி விடமுடியாது! ஆனால் சில பேரால் முடியும் !!
இன்று நேற்றல்ல, சுமார் ஒரு பதினைந்து வருடங்களாக இந்தியாவில் கோலோச்சிக்கொண்டிருக்கும் BPO எனப்படுகிற Business Process Outsourcing துறையில் வேலை செய்யும் ஒவ்வொருவரும் இந்த கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்கள் வைத்திருப்பார்கள்!
அதற்கு முன்னால் ... BPO என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு!
ஒருவன் செய்ய கூடிய , செய்ய வேண்டிய வேலையை மற்றவருக்கு பணம் தந்து செய்ய சொல்வது தான் 'Outsourcing' என்பதின் சாராம்சம். இதில் வியாபாரம் என்னஇருக்கிறது என்று கேட்டால், ஒருவன் செய்ய கூடிய வேலையை, அதற்குசெலவாகும் பணத்தில் பாதியில் இன்னொருவன் முடித்து கொடுத்தால், வேலையை கொடுத்தவனுக்கு பணமும் மிச்சம், நேரமும் மிச்சம்!
இது முதல் முதலில் இந்தியாவில் தொடங்கப்பட்டது நடு 90'களில். 'Medical Transcription' (இதற்கான தமிழ் வார்த்தை தெரிந்தால் யாரேனும் கூறவும்) மற்றும்அதை சார்ந்த பிரிவுகளுக்காக அவுட் சோர்சிங் செய்ய ஆரம்பித்தார்கள். பின்னர்களின் இறுதியில் வாடிக்கையாளர் சேவை, தொழில்நுட்ப விளக்கங்கள், டேட்டா ப்ராசசிங் (தமிழ் வார்த்தை - ????) பிரிவுகளில் அவுட் சோர்சிங் தவிர்க்கமுடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது!
இந்த துறை பெரும்பாலும் இந்தியாவில் பெரும் வளர்ச்சி அடைய காரணம் சில..
1. குறைந்த காசுக்கு வேலையை முடித்து தரும் இந்தியனின் இளிச்சவாய்த்தனம்.
2.இந்தியாவின் வேலை இல்லா திண்டாட்டம்
3.இந்தியனின் விசுவாசம்
4.அவன் செய்யும் வேலையின் மதிப்பு தெரியாமல் வேலை பார்க்கும் Innocence!!
5. இந்தியா வின் மனித வளம்!!
இன்னும் பல காரணங்கள் உண்டு! அனைத்தும் இவற்றின் ஏதோவொன்றின் கீழ்வந்துவிடும்!
சில பேர்களுக்கு இவர்களின் வேலை தான் என்ன என்ற சந்தேகம் வரலாம்! "நாங்கலாம் காலைல பத்து மணிக்கு ஆபிசுக்கு போவோம். லெட்ஜெர் லகையெழுத்து போடுவோம். பதினொரு மணிக்கு டீ வட, நடுவுல அரட்ட, ஒருமணிக்கு மதிய சாப்பாடு, அப்புறம் சில கையெழுத்து.. சேர் ல உக்காந்துட்டு ஒருசின்ன தூக்கம்! அஞ்சு மணிக்கு வீடு!! என்ற அட்டவணைபடி வாழ்கின்றவர்கள், இந்த வேலைகளை புதியதாய் பார்க்கலாம்.
நான் இன்று எழுத நினைத்தது, Voice - based Support எனப்படுகிற தொலைபேசியில்பேசிகொண்டிருக்கும் வேலை பற்றி . உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவைஅளிக்க கூடிய நிறுவனங்கள் இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் பன்னாட்டு சேவை அளித்து வருகின்றன. அதாவது, வெளிநாட்டவர்கள்எங்கிருந்து கொண்டோ செய்யும் அழைப்பு வந்து சேர்வது இங்கு இந்தியாவில்ஒரு மூலையில், தனக்கென தரப்பட்டிருக்கும் கம்ப்யுட்டர் உடனும், தொலைபேசியுடனும் அமர்ந்திருக்கும் ஒரு இந்தியனிடம்.
உதராணமாக, தனது வங்கி கணக்கில் சிறிது பணம் காணாமல் போய் இருந்தால், அவன் அழைப்பது அவனது வங்கியை. அதாவது அவனது வங்கி என்று நினைத்துகொண்டு, இந்தியாவில் உள்ள ஒரு நிறுவனத்தை. அந்த நிறுவனத்தை சேர்ந்தஒரு ஊழியன், அந்த அழைப்புக்கு பதில் அளித்து, அந்த வாடிக்கையாளனின்நன்மதிப்பை பெற வேண்டும். அதனால் அந்த வங்கி மகிழ்ச்சி அடைகிறது, வங்கியால் நிறுவனத்துக்கு மகிழ்ச்சி, நிறுவனத்தினால் ஊழியனுக்கு மகிழ்ச்சி!!
இவ்வளவுதான்! இதற்கு பின்னால் உள்ளவற்றை நினைத்து பார்க்கும்போது தான்ஒரு பெரிய திரை நம் கண் முன்னால் விரிவதை காணலாம்.
பன்னாட்டு நிறுவங்களுக்கு சேவை அளிக்க கூடிய அனைத்து நிறுவனங்களும்இயங்குவது முழுவதுமாய் இரவு நேரங்களில். அங்கே பகல்! இங்கே இரவு.. பெரும்பாலும் அவர்களது நேரம் மாலை நேரங்களில் தொடங்கி முழு இரவு வரைசெல்லும். இரவு நேரம் என்பதால் அனைத்து நிறுவனங்களுமே தமதுஊழியர்களை அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்து விடுகின்றன.
எனக்கு தனிப்பட்ட ஒரு அனுபவம் இருப்பதால், என்னால் இதை சிறிது எழுத நினைக்கிறேன்.
எல்லாரும் உறங்க தொடங்கிவிடும் வேளைகளில் தன் இந்த உலகம் இயங்கதொடங்குகின்றது. இரவு எட்டு மணிக்கு குளித்து தெளிவாய் விபூதி வைத்து கொண்டுவரும் நடுத்தர வயதினரும், குளிக்க சோம்பேறித்தனம் கொண்டு வாசனைதிரவிய உதவியுடன் கிளம்பி வருபவரும், குடும்ப தேவையை ஈடு கட்ட அவசரசமையலை முடித்து கொண்டு , சிறு மகனுக்கு இரவு உணவூட்டி கிளம்புவோரும், தன் பணத்தேவைகளை தானே பார்த்துகொள்ளும் 'தன்னம்பிக்கை' பெண்களும், ஒரு சம்பளத்தில் வாழும் குடும்பத்தின் 'தூண்கள்' தன் குடும்பத்தின் கனவுகளை சுமந்து கொண்டு இரவு தூக்கத்தை துறக்க தயாராக நிற்பார்கள்.
இரவு எட்டு மணிக்கு அலுவலகம் என்றால், ஆறு மணிக்கெல்லாம் தயாரானால்தான் வாகன ஓட்டுனர் வந்து அழைத்து செல்வார். அந்த வாகனத்தில் ஏறவேண்டியவர்கள் என குறிப்பிடப்படவர்களை சுமந்து கொண்டு வாகனம், அலுவலகம் நோக்கி செல்லும். கண்களில் தூக்கம் கலந்த கனவுகளோடு, கழுத்தில் அடையாள அட்டையுடன் அடைக்கப்பட்ட வாகனங்களில்சிலர் செல்வதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இந்த வேலைக்காக அவர்கள் அடமானம் வைப்பது உடல் நலம், மன நலம்என்கிற இரு மனித தேவைகளை!
இரவு நேரம் முழுதும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அழைப்பவனுக்கு சலாம் போடுவதில் இருந்து ஆரம்பித்து, அவன்சொல்லுவதற்கெல்லாம் ஆமாஞ்சாமி! போட்டு கொண்டே இருப்பது தான்வேலையே !
ஒரு சிறிய உரையாடலை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
"Thank you for calling ******, My name is Sam, May I know you first name and your last name please?
Oh, Thank you. Steve, How are you doing today??
"Fantastic, Thanks for asking"
I understand your concern Steve. I am very much here to help you. We will work together as a team and we will solve on this call Steve!!
.........................................................
இதில் உச்ச கட்ட கொடுமை என்னவென்றால், பேசுபவன் மனநிலை சரி இல்லைஎன்றால், நம் அம்மாவில் தொடங்கி அம்மாவின் கொள்ளு பாட்டி வரை திட்டுவாங்க வேண்டி இருக்கும். அப்போதும் சிரித்து கொண்டே, கேட்டுக்கொள்ளவேண்டும். ( வேண்டும் என்றால் 'MUTE' போட்டு கொண்டு அவனை திட்டலாம், ஆனால் அவனுக்கு கேட்காது ). உங்களுக்கெல்லாம் சொரணையே இல்லையாஎன்று கேட்கலாம்.
இதே கேள்வியை நான் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது
"பணம் பண்ணும் வித்தைடா!!
இதெல்லாம் எடுத்துக்கொள்வோரின் மனநிலையை பொறுத்தது. அவன் தனக்குசேவை அளிக்கும் (அதாவது, நமக்கு அவுட் சோர்சிங் அளிக்கும் ) நிறுவனத்தைதிட்டுகிறான் என்று நினைத்து கொள்ளவேண்டியது தான்! ஆனால் உன் தலைமேல இருக்கும் விளம்பர பலகை சொல்லும் " நீ தான் நிறுவனம் என்று ".
என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை!
உட்கார்ந்தால் ஆடை கிழிந்து விடும் என்ற நிலையில் ஆடை அணிந்திருந்த பெண்ணை, கேட்டேன். நீ செய்யும் இந்த வேலை உனக்கு பிடித்திருக்கிறதா??
அவள் பதில் மிக நேராக இருந்தது, " நான் என் அப்பா அம்மாவை நம்பி இல்லை"
அவளுக்கு சம்பாத்தியம் தன்னம்பிக்கையை தந்திருந்தது. நல்ல விஷயம்! ஆனால் ஓர் சராசரி இந்திய பெண்ணிடம் இருந்து அவள் மாறுபட்டிருந்தாள், பேச்சு , உடை மற்றும் சிந்தனைகளில்..
அமெரிக்கா காரனோடு பேசுவது வேலை என்பதால் பேச்சு பயிற்சியோடு, அவர்களின் வாழ்கை முறை மற்றும் பழக்க வழக்கங்களையும் கற்றுதருவார்கள்(இது வெறும் வகுப்பறை பாடம் தான்!). அங்கே குடிப்பது என்பது மரியாதைக்குரிய ஒரு விஷயமாககருதபடுகிறது. இந்தியன் என்னதான் ஓர் உயரிய 'பாரில்' அமர்ந்து 'ஸ்காட்ச்' குடித்தாலும், இந்தியாவின் மொழியில் அவன் 'குடிகாரனே'. அவன் கலாச்சரதொடு ஒட்டி பழகுவதாலோ என்னவோ 'நான் குடிப்பதில்லை' என்றுசொன்னால் கேவலமாக பார்க்கிறார்கள். (குடிப்பது என்பது அந்தஸ்தை தரும் ஒரு செயல் என்று நான் நினைப்பதில்லை)
இது மாதிரி இரவு பறவைகளின் மனநிலைமை எப்படி இருக்கும், அவர்கள் செய்யவேண்டியது என்னென்ன என்பதை பற்றிய ஒரு கட்டுரை மிக சமீபத்தில் படித்தேன்.
'மன அழுத்தம்' மற்றும் 'பய உணர்வு ' இவர்களை அதிகம் பாதிப்பதாக அந்தகட்டுரை கூறுகிறது. மில் தொழிலாளிகள் மற்றும் உடலுழைப்பை நம்பிபிழைப்பும் கூட இரவு நேரம் வேலை செய்ய நேர்ந்தால், சிறிது நேரம்கண்ணயர்ந்து கொள்வார்கள். ஆனால் இங்கே நிலைமையே வேறு! வர கூடியஅழைப்பை எடுக்காமல் விட்டால், நிறுவனத்துக்கு டாலர் கணக்கில் நஷ்டம்ஏற்படும் என்று, கண்ணயர்ந்தாலும் சரி நீ அழைப்பை எடுத்துதான் ஆகவேண்டும்என்ற நிலைமை இருக்கும். எனவே வேலையினால் மன அழுத்தம்கொள்வோரும் உண்டு.
இன்னொன்று, இவர்கள் மேல் இருக்க கூடிய சமூகத்தின் பார்வை! ஒரு ஐ டிநிறுவனத்தில் வேலை செய்பவனையும், ஒரு கால் சென்டெரில் வேலைசெய்பவனையும் ஒரு சேர பார்த்தால், "நம்மவருக்கு" மரியாதையை இருக்காது. அது இந்த வேலை செய்பவர் எல்லாம் "கலாசார அழிப்பான்கள்" என்று சமுதாயம்இவர்கள் மேல் கொண்டிருக்கும் ஒரு பார்வை. இந்த துறையில் நமக்குஅயல்நாட்டு தொனியில் ஆங்கிலம் பேச தெரிந்தால் மட்டும் போதும்! நமக்கு
வேறென்ன தகுதிகள் இருக்கிறது என்றெல்லாம் கேட்க மாட்டார்கள். அதனால்என்னமோ பெரிய படிப்புலாம் படிச்ச, இப்போ இங்க தானே குப்ப கொட்ற", என்றுகீழ்த்தரமாய் ஒரு பார்வை நம் மேல் விழும். இங்கே நமது பட்டத்துகெல்லாம்மதிப்பில்லை என்பது சமூகம் இவர்களை இரண்டாம் நிலையில் வைத்துபார்ப்பதற்கான இன்னொரு காரணம். இதனால் மன அழுத்தம் கொள்வோரும்உண்டு.
வேலையை பற்றிய பாதுகாப்பு உணர்வு இந்த துறையில் மிக மிக குறைவு. ஒருவனை வேலையை விட்டு துரத்த காரணங்கள் கண்டுபிடிக்க மற்றதுறைகளை விட இங்கே வாய்ப்புகள் சுலபம் . எனவே ஒரு விதமான பய உணர்வுஇவர்களை ஆட்கொள்ளுகிறது.
'Biological Clock' எனப்படும் உடற் கூற்றை அளக்கும் கடிகாரம் இவர்களுக்குதாறுமாறாக செயல் படுவதாலும், 'Junk foods' எனப்படுகிற இந்திய உடல்நிலைக்கு ஒத்து வராத உணவுகளாலும், மேலும் அதனை உட்கொள்ளும் நேரம்
சரியாக இல்லாது இருப்பதாலும், பல்வேறு உடல் நல கோளாறுகளை இவர்கள்சந்திக்க நேரிடுகிறது.
இவ்வாறெல்லாம் வேலை செய்யும் இந்த துறையில், ஒரு மிகப்பெரிய பலம், ஒரு விதமான சாதகம் என்று கூட சொல்லலாம். எந்த துறை இழுத்துமூடப்பட்டாலும் இந்த துறை இருக்கும். ஏனென்றால், இனிமேல் புதியபொருட்கள் தயாரிக்க விட்டாலும், தயாரித்து வெளியிட்ட பொருட்களுக்குசேவை" செய்ய வேண்டும் அல்லவா? அதற்கு இங்கே தான் வந்தாக வேண்டும். மேலும், இங்கே விளையாடும் பணம். Time is Money என்பதுதான் இங்கேஎழுதப்பட்டு , எழுதப்படாத விதி!
நான் இந்த துறையை பற்றி எழுத நினைத்து எழுதிவிட்டேன். உடல் நலம், மனநலத்தில் மிக சிறந்தவர்கள் இங்கே தாராளமாய் வேலைக்கு செல்லலாம். என்னை மாதிரி சொகுசு விரும்பிகளுகெல்லாம் சரிப்பட்டு வராது!
2 comments:
நன்றி, உதவிகரமாக இருந்தது ...
இதே போல IT நிறுவன கட்டுரைகளை எதிர்பார்கிறேன் . நன்றி...
Post a Comment