Wednesday, May 6, 2009

கடவுள் நெய்யும் சேலை !



நான்கு நாட்களுக்கு முன்பு, நண்பன் பேபி ஆனந்தனின் "காஞ்சீவரம்" விமர்சனம் படித்த பிறகுதான் படத்தை பார்க்கும் ஆர்வம் வந்தது. டொராண்டோ உலக திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பாராட்டுகள் பெற்ற படம் என்று செய்திகளில் படித்திருந்தாலும், படத்தை பார்க்கும் ஆர்வம் ஏனோ வரவில்லை. காரணம், டாகுமென்டரி என்று முத்திரை குத்தப்பட்ட படங்களின் நத்தை மாதிரி செல்லக்கூடிய "Monotonous" திரைக்கதை அமைப்பு!

ஆனால், காஞ்சீவரம் என் எண்ணங்களை துச்சமென தவிடு பொடியாக்கி, இதோ படத்தை பற்றி என்னை எழுத வைத்துள்ளது!நெசவாளிகளின் வாழ்வியலை சொல்லும் படம்!

எப்படி , கட்டபொம்மன் படம் பார்த்து விட்டு, கட்டபொம்மனே நேரில் வந்தாலும்," டேய், நம்ம நடிகர் திலகம் டா" என்று சொன்னது போல, வேங்கடம் என்று ஒருவன் இருந்திருந்தால் அவன் இப்படித்தான் இருந்திருப்பான் என்று படத்தை ABT பார்சல் சர்வீஸ் ஆஞ்சநேயர் போல் தூக்கி நிறுத்துகிறார் வேங்கடம் , சாரி ! பிரகாஷ் ராஜ். இந்த படம் பார்த்த பிறகு, இது நாள் வரை "ஹாய் செல்லம் " என்று பேச வைத்து ஒரு மிகச்சிறந்த கலைஞனை கெடுத்து கொண்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.( வாழிய பல்லாண்டு தமிழ் சினிமா !!)

நெசவாளியான வேங்கடம், தன்னை கட்டிக்கொள்ள போகிறவளுக்கு, பட்டு சேலை அணிவித்து வீட்டுக்கு கூட்டி வர நினைக்க, அது முடியாமல் போகிறது. எனவே அதை தன் மகளுக்காவது செய்ய வேண்டும் என்று நினைத்து வாக்களித்து விடுகிறார்! அதை அவரால் செய்ய முடிந்ததா என்று , வேங்கடத்தின் வாழ்க்கையோடு ப்ரியதர்ஷன் நம்மை பயணிக்க வைக்கிறார்!

முதல் காட்சியில், வெறுமை நிறைந்த முகத்தோடு, ஜெயிலில் இருந்து பெயிலில் வெளியே வந்து , அவர் ஊருக்கு போகும் வேங்கடத்தின் நினைவுகளாக காட்சிகள் விரிகின்றன! கல்யாணமாகி கம்பீர நடையோடு, தன் பொண்டாடியை ஊருக்கு அழைத்து வரும் வேங்கடம் , அழகாக இருக்கிறார் ( இரண்டு முகத்துக்கும் மிகச்சிறந்த வேறுபாடு ). மனைவி "அன்னமாக" ஸ்ரேயா ரெட்டி! இத்தன நாளா எங்க இருந்தீங்க ? என்று கேட்க வைக்கிற இயல்பான, அழகான நடிப்பு! அவர் முகத்தில் படரும் மென் சோகம் ரொம்பவே அழகு !


கதை :

காஞ்சீவரம் வட்டாரத்திலேயே நெசவில் சிறந்து விளங்கும் வேங்கடம், தான் நெய்யும் சேலையின் மதிப்பை உணராமல் , அடிமாட்டு விலைக்கு தன் உழைப்பை உறிஞ்சும் முதலாளியின் தறி சாலையில் வேலை பார்க்கிறார்.
மகளின் பட்டு சேலைக்கென்று சேர்த்து வைத்திருந்த பணத்தை , தங்கை கணவனிடம் கொடுத்து விடும் வேங்கடம் , பட்டு நூல் வாங்க பணமில்லாமல், தான் வேலை செய்யும் இடத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை திருட தொடங்குகிறார்! ஒரு கட்டத்தில் , மகளுக்கென கணவன் நெய்யும் புடவையை முழுசாய் கூட பார்க்க முடியாமல் , வேங்கடத்தின் கைகளில் , இறந்து விடுகிறார் அன்னம். அதன் பின், மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேங்கடதிடம் முழுசாய் வருகிறது. வாழ்க்கை பயணத்தில், கம்யூனிசம் தடை செய்ய பட்டிருந்த காலத்தில், அதன் கொள்கைகளால் ஈர்க்க பட்டு, முதலாளித்துவத்தை, வேலை நிறுத்தம் அறிவித்து எதிர்க்கும் வேங்கடம் , கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டு கைது செய்ய படுகிறார். இந்நிலையில், தன் மகளுக்கும் , உற்ற நண்பனின் மகனுக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிடுகிறது! மகளுக்கு, பட்டு சேலை அணிவித்து உங்கள் வீட்டுக்கு அனுப்புகிறேன் என்று வாக்கு கொடுக்கிறார்.
கல்யாண தேதி நெருங்கும் சமயம், தன் சுயநலத்திற்காக வேலை நிறுத்தம்விடுத்து, வேலை செய்யுமாறு எல்லா நெசவாளிகளையும் அழைக்கிறார். இதனால் உற்ற நண்பனின் நட்பை இழக்க நேரிடுகிறது. பட்டு நூலை திருடும்போது மாட்டிக்கொள்ளவும் செய்கிறார். இதனால் ஜெயிலுக்கு போக வேண்டிவருகிறது. தண்ணீர் எடுக்க சென்ற இடத்தில், தவறி விழுந்து பக்கவாதத்தால்அசைய முடியாமல் கிடக்கும் மகளை பார்க்க, பெயிலில் வருகிறார். அவளைபார்த்து கொள்ள யாரும் இல்லாத காரணத்தால், "யாரு தான் தப்பு செய்யறது இல்ல ", என்று தான் கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி, தான் மகள் படும் துன்பத்தை பார்க்க முடியாமல் , விஷம் கலந்த சோற்றை அவளுக்கு தான்மடியில் படுக்க வைத்து ஊட்டுகிறார்.

இறந்து விட்ட தான் மகளின் மீது போர்த்துவதற்காக, தான் பாதி நெய்திருக்கும்பட்டு சேலையை கொண்டு வருகிறார். அவள் உடம்பை அந்த பட்டு சேலைமுழுசாய் கூட, மூட முடியாத போது, ஏழை நெசவாளி, என்னதான் லட்ச ரூபாய்க்கான பட்டு புடைவை நெய்தாலும், அவனால் அதை வாழ்நாளிலும் உடுத்திப்பார்க்க முடியவே முடியாது என்ற முகத்தில் அறையும் க்ளைமாக்சோடுபடம் நிறைவடைகிறது.

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்து ஒரு வருட காலத்திற்கு பின்புதான் , கம்யூனிசம் இந்தியாவில் நன்றாய் தலை தூக்கி, "கோ - ஆபரேடிவ் சொசைடீ" க்கள் அறிமுகபடுத்தப்பட்டன என்று தெரிய வரும் போது, வேங்கடத்தின் மேல் ஒரு பரிதாபம் தான் நமக்கு வருகிறது!

நெசவாளிகளின் வாழ்கை முறை, முதலாளித்துவத்தின் சர்வாதிகார போக்கு, தான் செய்யும் வேலையின் மதிப்பை உணராத ஏழைகளின் அப்பாவித்தனம் என்று எல்லா இடங்களிலும் சுதந்திர இந்தியாவின், ஆரம்ப காலங்களை கண் முன் நிறுத்துகின்றனர். திரு வின் ஒளிப்பதிவு, கதையோட்டத்தின் தூண் என்றுசொல்லலாம்.


படத்தில் இடம் பெற்ற ஒரு சிறிய உரையாடல்!

வேங்கடம் : என் மேல கோவமா ?
அன்னம் : இல்ல .....
வேங்கடம் : இப்பதான் முதல் தடவ பொய் சொல்றியா? இல்ல இதுக்கு முன்னாடியே சொல்லிருக்கியா ?
அன்னம் : ....................................
வேங்கடம் : இல்ல.. அன்னம் .. நம்ம பொண்ணுக்கு வேற பணம் வச்சிருக்கேன்!
அன்னம் : இப்பதான் முதல் தடவ பொய் சொல்றீங்களா ? இல்ல இதுக்கு முன்னாடியே சொல்லிருகீங்களா ?

உரையாடல் : மதன் & விஜய். பாராட்ட பட வேண்டியவர்கள்!

அழகான கதைக்கு அதிர்வில்லாத இசை : ஸ்ரீ குமார் ! சூப்பர் சார்..

மிகச்சிறந்த கதைக்களன். அழகான ஒளிப்பதிவு, மெதுவான இசை , என்று நெஞ்சை சுடும் அழகான அனுபவம் காஞ்சீவரம்!

இந்த படத்தின் மற்றுமொரு விமர்சனம் படிக்க இங்கே க்ளிக்கவும்!

Tuesday, May 5, 2009

எஞ்சலீனாவின் கண்ணீர்!



Angelina Jolie is Crying !

Jackie Chan : Why are you crying, What happened to you??

Arnold : What happened hunnie?

Brad Pitt : Dear, Let me know the reason for your tears.

கேப்டன் விஜயகாந்த்: டேய், இவ்வளவு கேட்டிங்களே, அந்த புள்ள எதுக்கு அழுவுதுனு யாராச்சும் கேட்டிங்களா டா???

கேப்டன் வாழ்க!

பிகர் மடக்கும்,மைண்டைன் பண்ணும் வழிகள் பத்து!

எனதருமை இளைய சமுதாயமே! நான் உங்களுக்கெல்லாம் ஒன்று கூறி கொள்ள ஆசைப்படுகிறேன், விருப்பபடுகிறேன். நாட்ல அவனவனுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், கழுவ தண்ணியே இல்லாம இருந்தா கூட , ஆளுக்கு ஒரு பிகர் மைண்டைன் பண்றது தலையாய கடமையாகும்!

பிகர் இல்லாது ஒருவன் வாழ்வானாயின், அவன் இருந்தும் இறத்தலுக்கு சமம் என்று நான்லாம் சொல்லலீங்க, போதைல நம்ம சித்தர் சொன்னது. இப்போ பாத்தீங்கன்னா சார், பெண்கள்ல மூணு விதம், நாலு விதம் னு நான் கதைலாம் சொல்ல வரல! ஆனா பெண்களுக்கு னு சில குணாதிசயங்கள் உண்டு. இத புரிஞ்சவன் தான் பெண்களை உஷார் செய்வதில் பலே கில்லாடியாக இருக்கிறான்.

இதெல்லாம் நான் எங்க கத்துகிட்டேன்னா, நம்ம சிங்கார சென்னை ல தான். எங்கபாத்தாலும் ஒருத்தன், ஒரு பிகரோட சுத்தறான். எப்படி தான் மடிக்கரானுன்களோ தெரியல! என் நட்பு வட்டாரத்தில் ஒன்று புலம்பியது , " இப்பலாம், ஸ்கூல்லயே மடிச்சிடரனுங்க, எவள பாத்தாலும் "commited" னு சொல்றா"...

"பிகர் மடித்தல்" என்று ஆய கலைகள் அறுபத்தி நாலில், அறுபத்தி ஐந்தாக சேர்த்திருக்கலாம். நம்ம மக்களுக்கு இந்த "சூத்திரம்" தெரிய மாட்டேங்குது, இதற்காகவே, சில பல Ph.D கள பண்ணி, ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதணும்ன்ற ஒரு சமுதாய பொறுப்பு, இளைய சமூகமான எனக்கும் இருக்கு! இதற்காக, நானும் என் நட்பு வட்டாரமான "மன்மத குஞ்சும்" சேர்த்து செய்த ஆராய்ச்சிகட்டுரையின் முடிவுகள் இங்கே! இத பாலோ பண்றேன் பேர்வழி னு பிகர்அண்ணன் கிட்டயோ, அப்பா கிட்டயோ நீங்க டின் வாங்கி கட்டிகிட்டா நானோ, மதனோ பொறுப்பு இல்ல!

பிகர் மடிக்கும் வழிமுறை 1:

ஆங்கிலத்தில் "Pick Up Lines" என்று சொல்லுவார்கள். இது பெரிய மேட்டர்லாம் இல்ல. பிகராண்ட நம்ம பேசற முதல் வார்த்தைகள், அவ்ளோதான்! தெரியாதபிகரா இருந்தா தான் இந்த ஸ்டெப். இல்லாட்டி டைரக்ட்டா ரெண்டாவது ஸ்டெப்புக்கு போய்டலாம்.

1. உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே,
2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க (ஹி ஹி ஹி !!)
3. இது உங்க கர்சீப்பா ?

இதெல்லாம் சரோஜா தேவி காலத்துல, உபயோக படுத்தப்பட்ட "Pick up - Lines". இதையே இன்னும் சொல்லிடு இருந்தா, சால்ட்டு கோட்ட சரசு கூட மடிய மாட்டா!
தைரியமா பேர் சொல்லி அறிமுக படுத்திகிட்டு, பேச ஆரம்பிங்க! முதல் தடவை பேசும்போதே "உங்க கண் அழகா இருக்கு , மொகற கட்ட அழகா இருக்கு னு, கேனதனமா வழியாம, தமிழ அழகா உச்சரிக்கிற பசங்கள பொண்ணுங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்! கொஞ்சம் ஹை - கிளாஸ் பிகரா இருந்தா பேசும் போது ரெண்டு மூணு இங்கிலீஷ் வார்த்தைய பேசறது உசிதம்! இதுக்காக தமிழ்ல சொன்னதையே "மேஜர் சுந்தர் ராஜன் " மாதிரி இங்கிலீஷ் ல சொன்னா, பிகர் கேவலமாய் உங்கள பாக்க ஆரம்பிச்சிடும்.


பிகர் மடிக்கும் வழிமுறை 2 .

நான் ரொம்ப நல்லவனாக்கும்! இது பொண்ணுங்களுக்கு பிடிக்காத விஷயம். அவங்க பாஷைல இதுக்கு பேரு "Self - Dabba". நல்லவன் மாதிரி இருக்கறகொஞ்சூண்ட்டு" கெட்ட பசங்களை தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அக்கேஷனல் டிரிங்கர்ஸ் / "தம்மர்ஸ்" - கு, பொண்ணுங்க எப்பவுமே வெல்கம்சொல்லுவாங்க. (அதுக்காக தம் அடிச்சுட்டு பிகர் முன்னாடி போய் அப்படியே நிக்காதீங்க, ஒரு சென்டெர் பிரெஷ் , ஒரு ஹால்ஸ் உங்களுக்கு உதவும்)

பிகர் மடிக்கும் வழிமுறை 3 :

பிகர பாக்க போகும்போது, ராமராஜன் மாதிரி கலர் கலரா டிரஸ் பண்ணாம, சிம்பிள் லுக் ல போங்க! ஜீன்ஸ் நமக்கு உற்ற தோழன்!
தல கலரிங்லாம் ஒரு அளவுக்கு இருந்தா ஒ கே! காரகொழம்ப தலைலகவுத்துகிட்ட பையனுக்கு, பொண்ணுங்க சொல்றது "நோ நோ ". நீங்க நீங்களா இருங்க! அந்த ஒரிஜினாலிட்டில தான் பசங்களோட அழகே இருக்குனு பிகர்கள் பீல் பண்ணுகின்றன.

பிகர் மடிக்கும் வழிமுறை 4:

பிகர்கள் விரும்பும் ஒரு விஷயம் "Sense of humor" . மொக்க ஜோக் அடிச்சாலும் ஹா ஹா, ஹீ ஹீ " னு சிரிப்பாங்க. ஆனா அவங்க மனசு புண் படாத மாதிரி, காமெடி பண்ணி அவங்கள சிரிக்க வச்சிட்டா நீங்க "பாஸ்"னு அர்த்தம். Soft Core "A" ஜோக்ஸ் களுக்கும் பச்சை கொடி உண்டு! காமெடி பண்றதா நெனச்சிக்கிட்டு உங்க அப்பா என்ன, அய்யனார் கோயில் பூசாரி யா, அவளோ பெரிய மீச வச்சிருக்காரு?" - இப்படிலாம் கேட்டா ஆரம்பத்துலேயே அத்துக்கும். தன்னை சிரிக்க வெக்கற பையன பொண்ணுங்களுக்கு எப்பவும் பிடிக்கும்.


பிகர் மடிக்கும் வழிமுறை 5 :

உங்களுக்கு லவ் ல நம்பிக்கை இல்ல, அப்படிங்கற இம்ப்ரெஷன் பிகருக்குகொண்டு வந்துடா, அப்பறம் பிரச்சனை இல்ல. உங்களோட அணுகுமுறைய பொறுத்து , பிகரால உங்க கூட பேசாம இருக்க முடியாது அப்படிங்கற சிச்சுவேஷன் வந்துடா, லவ் ப்ரபோஸ் பண்றது பெரிய விஷயம் இல்ல. இந்த "I love you " லாம் கத்துகுட்டி பசங்க சொல்றது, நல்லா மெச்சூர்டா, ஒரு அழகான தருணத்துல ப்ரபோஸ் பண்ணா உங்க லவ் சக்சஸ் தான்!

" உன் கூட நடந்தப்போ என் லைப் ரொம்ப அழகான மாதிரி இருந்திச்சு னு ", நீங்க யூஸ் பண்ற வார்த்தைகள் ஒவ்வொண்ணுக்கும், அர்த்தம் இருக்கு. So, Choice of Words, Very Important ........

"உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே"

பிகர் கரெக்ட் பண்ணியாச்சு! மைண்டைன் ????

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 1:

இது நமக்கு கொஞ்சம் காஸ்ட்லீ மேட்டர். பொண்ணுங்களுக்கு நீங்க அடிக்கடிதரக்கூடிய அதிர்ச்சி + அழகான கிப்ட் , உங்களோட லவ்வ இன்னும் ஸ்ட்ராங்ஆக்கும்! திடீர்னு ஒரு ரோஸ், ஒரு குட்டி டெட்டி , ஒரு காஃபி மக், அவளுக்குபிடிச்ச மியூசிக் ஆல்பம்..... இப்படி எதாச்சும் குடுத்து அசத்திட்டே இருக்கணும். பர்மா பஜார் ல வாங்குன ஐய்டமா இருந்தாலும், நீங்க கொடுத்ததுனா அது தனிதான்!

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 2:

உங்க கிட்ட ஒரு பைக் இல்லாட்டியும், கைல, கால்ல விழுந்தாவது அப்பாகிட்டயோ, ப்ரென்ட் கிட்டயோ ஒரு பைக்க உஷார் பண்ணிடுங்க! ஏன்னா, கார் இல்லாட்டி கூட பைக்ல உக்காந்துட்டு , அப்படியே ஒரு ஜாலி ரைட் போக தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பைக் ஓட்ற ஸ்டைல் வச்சுதான் நீங்க ஹீரோவா ஜீரோவா னு பிகர்கள் முடிவு செய்கின்றன.

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 3:

பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற ஆண் மகன் பெண்களின் இதயங்களை சுலபமாய் ஜெயித்து விடுவான். " உங்க அப்பாவுக்கு ஹார்ட்அட்டக்காமே! ஹே ஹே !! என்றால் நீங்கள் காலி என்று அர்த்தம். புரிதல்எதிர்பார்க்கும் பெண்களிடம், நீங்கள் தான் விட்டுகொடுத்து போக வேண்டும்!
இப்படி அவள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்தால் பால் எப்பவும் உங்கள்கோர்ட்டில் தான்!


பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 4:

சின்ன சின்ன குறும்புகள், செல்ல செல்ல கோபங்கள் தான் காதலுக்கு அழகு! அடிக்கடி சொல்லும் ஐ லவ் யூக்கள் உங்களின் காதலை மேலும் அழகாக்கும்! ஆகையினால் பிகர் பார்க்க போகும் போது, ஆபீஸ் வேஷத்தை கழற்றி வைத்துவிட்டு செல்லுங்கள். போன உடனே ஆரம்பிக்காமல் , அவளோடு உட்கார்ந்து பேசும்போது, உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதீர்வு கிடைக்கும், ஏனெனில் அவர்கள் தான் மூளையில் இருந்து யோசிப்பார்கள்!
(மாம்ஸ் ! நம்மலாம் பாக்க முரடா இருந்தாலும் சாப்ட் ஹார்டட் பெல்லாஸ்)

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 5 :

உங்கள் காதல் வெற்றிகரமாக இருக்க, சேர்த்து கொள்ள வேண்டியது, நம்பிக்கை, புரிதல் மற்றும் விட்டுகொடுத்தல். தவிர்க்க வேண்டியது வீண் சந்தேகம், புறக்கணிப்பு, மதிப்பு கொடுக்காதிருத்தல். இதெயெல்லாம் நீங்கள் பாலோ செய்தால் இந்த நாள் மாத்திரமல்ல, எல்லா நாளிலும் நீர் தான் காதல் மன்னன்!

பிகர் மடிக்கும் வழிமுறைகளை எழுத உதவி செய்த எல்லா சினிமாகாரர்களுக்கும் , இன்ஸ்பிரேஷனாக இருந்த சுரேஷ் கும் நன்றிகள் பல.

Inspired from www.sureshstories.blogspot.com




,

கோடம்பாக்கம் ரயில் நிலையம்





தேதி
: 30-02-2009 நேரம்: 07:43:25 , 26 , 27 PM ........




கோடம்பாக்கம் ரயில் நிலையத்தின் இரண்டாவது நடை மேடையின் மூன்றாவது சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். எனக்கு இருபத்தி இரண்டு வயது. அடித்து பிடித்து பொறியியல் பாஸ் செய்து, இரண்டு மூன்று காதல் தோல்விகளோடு கல்லூரி விட்டு வெளியே வந்து, பெயர் தெரியாத ஒரு மென்பொருள் நிறுவனத்தில் எட்டாயிரம் சம்பளத்தில் குப்பை கொட்டி கொண்டிருக்கிறேன். இதில் ஆட்குறைப்பு என்று பயமுறுத்தல் வேறு! உயரியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் தங்கை, காது ஆபரேஷன் என்று காத்து கொண்டிருக்கும் அம்மா, வாழ்க்கையே பிடிமானம் இல்லாமல் இருந்தது. நன்றாக சிரித்து நான்கு மாதங்கள் இருக்கும் என்று நினைத்த படியே அமர்ந்திருந்த போதுதான் அவரை பார்த்தேன்!

அவருக்கு அறுபது வயது இருக்கலாம். அவர் நடையில் ஒரு துள்ளல் இருந்தது. என்னவோ சாதித்து விட்ட ஒரு குதூகலம்! காக்கி சட்டையும் பேன்ட்டும் அணிந்திருந்தார். அவரை யார் யார் பார்த்தார்களோ தெரியவில்லை, ஆனால் எல்லாருக்கும் வணக்கம் சொல்லி சிரித்துகொண்டிருந்தார். கையில் ஸ்டேஷன் மாஸ்டர் போல் பச்சை கொடி, சிவப்பு கொடி வைத்திருந்தார்.

"ரைம்ஸ் சொல்லு டா , செல்லம் ல சொல்லு டா !" என்று தன் மூன்று வயது மகனிடம் கெஞ்சி கொண்டிருந்த அம்மாவின் அருகில் வந்து நின்றார் . அந்த குழந்தையை பார்த்து , கையை காலை தூக்கி, நடனம் போல்

""Down by the station
Early in the morning,
See the little puffer bellies
All in a row!
Puff Puff Toot toot
Off we go!!""

என்று பாடு பாடி ஆட ஆரம்பித்து விட்டார். அவர் செய்கை எல்லாருக்கும் புதியதாய் , பைத்தியகாரதனமாய் தோன்றி இருக்கலாம். அந்த குழந்தை மேலும் அழத்தொடங்கியது. அதன் தலையில் தட்டிய வாறே சிரித்து சென்றார்.

அன்றைய தின நாளிதழை படித்து கொண்டிருந்த ஒருவரின் பின்னால் நின்று எட்டி பார்த்து படித்து விட்டு, தன்னால் சிரித்து கொண்டார். எனக்கு அவர் செய்கை வித்யாசமாய், சிரிப்பை தந்தது. இத்தனை வயதிலும் இப்படி குழந்தை மாதிரி மகிழ்ச்சியாக இருக்க இவரால் மட்டும் எப்படி முடிகிறது?? அவரை கேட்டே ஆகவேண்டும்.

"சார், என் பேரு வேணு. இங்க தான், G.N. Chetty ரோடு ல எனக்கு ஆபீஸ்,". அதுக்கு? என்பது போல் அவர் பார்வை என்னை பார்த்தது. "நானும் உங்கள வந்ததுல இருந்து பாக்கறேன், உங்களால மட்டும் எப்படி சார், இவ்வளோ சந்தோஷமா இருக்க முடியுது?" மறுபடியும் கேனத்தனமான அந்த சிரிப்பு!

"டேய் பையா," , அவர் "பையா" என்றது "பியா" என்று சொல்வது போல் இருந்தது. முதல் சந்திப்பிலேயே "டேய்" போட்டது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
"திருக்குறள் படிச்சிருக்கியா நீ "? "இடுக்கண் வருங்கால் நகுக, அப்படினாஎன்னனு தெரியுமா?" டெஸ்கார்டெஸ் பத்தி தெரியுமா?, சார்லி சாப்ளின் - வாழ்க்கை சரிதம் படிச்சிருக்கியா?". அவர் கேள்விகள் கேட்டது எனக்கு எரிச்சலாய் வந்தது! " சார், எனக்கு அதெல்லாம் தெரியாது, படிச்சதில்ல".
"அப்ப நீ சந்தோஷமா இருக்க முடியாது". எனக்காக அவர் நிற்கவில்லை. போய்கொண்டே இருந்தார். " சார் , சார் , ஒரு நிமிஷம், என்ன சார் இப்படி சம்பந்தமேஇல்லாம பேசிட்டு போறீங்க ?" , நான்.

"டேய் பியா, வாழ்க்கைல எல்லாத்துக்கும் ஏதோ ஒரு விதத்துல சம்பந்தம்இருக்கு. சம்பந்தம் இல்லாம எதுமே நடக்கிறது இல்ல. நீ சந்தோஷமாஇருக்கணும்னா , மத்தவங்கள சந்தோஷ படுத்து! உன்ன சுத்தி இருக்கறவங்கசந்தோஷமா இருந்தா, அந்த "vibes" உன்னையும் சந்தோஷமா வச்சிருக்கும். புரிஞ்சுதோ ?"

எனக்கு புரிந்ததோ தெரியவில்லை, தலையை மட்டும் ஆட்டிக்கொண்டேன். அப்போதுதான் அங்கே வித்யாசமாய் ஒரு நிகழ்வு நடந்தது. என் கண் முன்னே, அந்த பெரியவர் காற்றிலே கரைந்து போய் கொண்டிருந்தார்!, கரையும் அந்த உடலுக்கு பின்னால், சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த அந்த எழுத்துக்கள் தெரிய தொடங்கின!

" கண்ணீர் அஞ்சலி "
எங்கள் குறைகளை உங்கள் போராட்டத்தால் , தமிழக அரசின் காதுகளில் விழச்செய்து எங்களுக்கு வெற்றி தேடி தந்த தெய்வமே! உங்கள் பிரிவால் என்றும்வாடும் ,
SRMU தொழிலாளிகள் சங்கம், கோடம்பாக்கம்.

சண்முகநாதன்
தலைவர், SRMU
தோற்றம் : 12-12-1952 மறைவு: 28-02-2009

புகைப்படத்தில் சண்முகநாதன் என்ற பெயரை கொண்டிருந்த அந்த பெரியவர் சிரித்துகொண்டிருந்தார்!

அதிர்ச்சியில் என் ரத்தம் உறைந்து கொண்டு இருந்தது! என் கால்கள் நடுங்கிகொண்டு இருந்தன! தலையில் வியர்வை பெருக்கு ஆறாய் ஓடியது....
"தண்ணி, த, தண்.... " . பேசுவதற்கு வரவில்லை. தலை கனத்தது! சுற்றியது! அம்மா, தங்கை இருவரும் கண்ணுக்கு முன்னே தெரிந்தார்கள். அங்கேயே மயங்கி விழுந்தேன்..................................................................................................





"வேலை பறிக்கப்பட்டதால், மென்பொருள் பொறியாளர், கோடம்பாக்கம் ரயில்நிலையத்தில், ரயில் முன் பாய்ந்து தற்கொலை" : அங்கே காற்றில் ஆடி கொண்டிருந்த இரண்டு நாள் முந்தைய செய்தி தாளை யாரும் கவனித்ததாய் தெரியவில்லை!

"சம்பந்தம் இல்லாம எதுமே நடக்கிறது இல்ல...................".. காற்றில் அந்த குரல் மட்டும் எங்கேயோ கேட்டு கொண்டே இருந்தது.