Tuesday, May 5, 2009

பிகர் மடக்கும்,மைண்டைன் பண்ணும் வழிகள் பத்து!

எனதருமை இளைய சமுதாயமே! நான் உங்களுக்கெல்லாம் ஒன்று கூறி கொள்ள ஆசைப்படுகிறேன், விருப்பபடுகிறேன். நாட்ல அவனவனுக்கு என்ன பிரச்சனை இருந்தாலும், கழுவ தண்ணியே இல்லாம இருந்தா கூட , ஆளுக்கு ஒரு பிகர் மைண்டைன் பண்றது தலையாய கடமையாகும்!

பிகர் இல்லாது ஒருவன் வாழ்வானாயின், அவன் இருந்தும் இறத்தலுக்கு சமம் என்று நான்லாம் சொல்லலீங்க, போதைல நம்ம சித்தர் சொன்னது. இப்போ பாத்தீங்கன்னா சார், பெண்கள்ல மூணு விதம், நாலு விதம் னு நான் கதைலாம் சொல்ல வரல! ஆனா பெண்களுக்கு னு சில குணாதிசயங்கள் உண்டு. இத புரிஞ்சவன் தான் பெண்களை உஷார் செய்வதில் பலே கில்லாடியாக இருக்கிறான்.

இதெல்லாம் நான் எங்க கத்துகிட்டேன்னா, நம்ம சிங்கார சென்னை தான். எங்கபாத்தாலும் ஒருத்தன், ஒரு பிகரோட சுத்தறான். எப்படி தான் மடிக்கரானுன்களோ தெரியல! என் நட்பு வட்டாரத்தில் ஒன்று புலம்பியது , " இப்பலாம், ஸ்கூல்லயே மடிச்சிடரனுங்க, எவள பாத்தாலும் "commited" னு சொல்றா"...

"பிகர் மடித்தல்" என்று ஆய கலைகள் அறுபத்தி நாலில், அறுபத்தி ஐந்தாக சேர்த்திருக்கலாம். நம்ம மக்களுக்கு இந்த "சூத்திரம்" தெரிய மாட்டேங்குது, இதற்காகவே, சில பல Ph.D கள பண்ணி, ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதணும்ன்ற ஒரு சமுதாய பொறுப்பு, இளைய சமூகமான எனக்கும் இருக்கு! இதற்காக, நானும் என் நட்பு வட்டாரமான "மன்மத குஞ்சும்" சேர்த்து செய்த ஆராய்ச்சிகட்டுரையின் முடிவுகள் இங்கே! இத பாலோ பண்றேன் பேர்வழி னு பிகர்அண்ணன் கிட்டயோ, அப்பா கிட்டயோ நீங்க டின் வாங்கி கட்டிகிட்டா நானோ, மதனோ பொறுப்பு இல்ல!

பிகர் மடிக்கும் வழிமுறை 1:

ஆங்கிலத்தில் "Pick Up Lines" என்று சொல்லுவார்கள். இது பெரிய மேட்டர்லாம் இல்ல. பிகராண்ட நம்ம பேசற முதல் வார்த்தைகள், அவ்ளோதான்! தெரியாதபிகரா இருந்தா தான் இந்த ஸ்டெப். இல்லாட்டி டைரக்ட்டா ரெண்டாவது ஸ்டெப்புக்கு போய்டலாம்.

1. உங்கள எங்கயோ பாத்த மாதிரி இருக்கே,
2. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க (ஹி ஹி ஹி !!)
3. இது உங்க கர்சீப்பா ?

இதெல்லாம் சரோஜா தேவி காலத்துல, உபயோக படுத்தப்பட்ட "Pick up - Lines". இதையே இன்னும் சொல்லிடு இருந்தா, சால்ட்டு கோட்ட சரசு கூட மடிய மாட்டா!
தைரியமா பேர் சொல்லி அறிமுக படுத்திகிட்டு, பேச ஆரம்பிங்க! முதல் தடவை பேசும்போதே "உங்க கண் அழகா இருக்கு , மொகற கட்ட அழகா இருக்கு னு, கேனதனமா வழியாம, தமிழ அழகா உச்சரிக்கிற பசங்கள பொண்ணுங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்! கொஞ்சம் ஹை - கிளாஸ் பிகரா இருந்தா பேசும் போது ரெண்டு மூணு இங்கிலீஷ் வார்த்தைய பேசறது உசிதம்! இதுக்காக தமிழ்ல சொன்னதையே "மேஜர் சுந்தர் ராஜன் " மாதிரி இங்கிலீஷ் சொன்னா, பிகர் கேவலமாய் உங்கள பாக்க ஆரம்பிச்சிடும்.


பிகர் மடிக்கும் வழிமுறை 2 .

நான் ரொம்ப நல்லவனாக்கும்! இது பொண்ணுங்களுக்கு பிடிக்காத விஷயம். அவங்க பாஷைல இதுக்கு பேரு "Self - Dabba". நல்லவன் மாதிரி இருக்கறகொஞ்சூண்ட்டு" கெட்ட பசங்களை தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.
அக்கேஷனல் டிரிங்கர்ஸ் / "தம்மர்ஸ்" - கு, பொண்ணுங்க எப்பவுமே வெல்கம்சொல்லுவாங்க. (அதுக்காக தம் அடிச்சுட்டு பிகர் முன்னாடி போய் அப்படியே நிக்காதீங்க, ஒரு சென்டெர் பிரெஷ் , ஒரு ஹால்ஸ் உங்களுக்கு உதவும்)

பிகர் மடிக்கும் வழிமுறை 3 :

பிகர பாக்க போகும்போது, ராமராஜன் மாதிரி கலர் கலரா டிரஸ் பண்ணாம, சிம்பிள் லுக் போங்க! ஜீன்ஸ் நமக்கு உற்ற தோழன்!
தல கலரிங்லாம் ஒரு அளவுக்கு இருந்தா கே! காரகொழம்ப தலைலகவுத்துகிட்ட பையனுக்கு, பொண்ணுங்க சொல்றது "நோ நோ ". நீங்க நீங்களா இருங்க! அந்த ஒரிஜினாலிட்டில தான் பசங்களோட அழகே இருக்குனு பிகர்கள் பீல் பண்ணுகின்றன.

பிகர் மடிக்கும் வழிமுறை 4:

பிகர்கள் விரும்பும் ஒரு விஷயம் "Sense of humor" . மொக்க ஜோக் அடிச்சாலும் ஹா ஹா, ஹீ ஹீ " னு சிரிப்பாங்க. ஆனா அவங்க மனசு புண் படாத மாதிரி, காமெடி பண்ணி அவங்கள சிரிக்க வச்சிட்டா நீங்க "பாஸ்"னு அர்த்தம். Soft Core "A" ஜோக்ஸ் களுக்கும் பச்சை கொடி உண்டு! காமெடி பண்றதா நெனச்சிக்கிட்டு உங்க அப்பா என்ன, அய்யனார் கோயில் பூசாரி யா, அவளோ பெரிய மீச வச்சிருக்காரு?" - இப்படிலாம் கேட்டா ஆரம்பத்துலேயே அத்துக்கும். தன்னை சிரிக்க வெக்கற பையன பொண்ணுங்களுக்கு எப்பவும் பிடிக்கும்.


பிகர் மடிக்கும் வழிமுறை 5 :

உங்களுக்கு லவ் நம்பிக்கை இல்ல, அப்படிங்கற இம்ப்ரெஷன் பிகருக்குகொண்டு வந்துடா, அப்பறம் பிரச்சனை இல்ல. உங்களோட அணுகுமுறைய பொறுத்து , பிகரால உங்க கூட பேசாம இருக்க முடியாது அப்படிங்கற சிச்சுவேஷன் வந்துடா, லவ் ப்ரபோஸ் பண்றது பெரிய விஷயம் இல்ல. இந்த "I love you " லாம் கத்துகுட்டி பசங்க சொல்றது, நல்லா மெச்சூர்டா, ஒரு அழகான தருணத்துல ப்ரபோஸ் பண்ணா உங்க லவ் சக்சஸ் தான்!

" உன் கூட நடந்தப்போ என் லைப் ரொம்ப அழகான மாதிரி இருந்திச்சு னு ", நீங்க யூஸ் பண்ற வார்த்தைகள் ஒவ்வொண்ணுக்கும், அர்த்தம் இருக்கு. So, Choice of Words, Very Important ........

"உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே"

பிகர் கரெக்ட் பண்ணியாச்சு! மைண்டைன் ????

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 1:

இது நமக்கு கொஞ்சம் காஸ்ட்லீ மேட்டர். பொண்ணுங்களுக்கு நீங்க அடிக்கடிதரக்கூடிய அதிர்ச்சி + அழகான கிப்ட் , உங்களோட லவ்வ இன்னும் ஸ்ட்ராங்ஆக்கும்! திடீர்னு ஒரு ரோஸ், ஒரு குட்டி டெட்டி , ஒரு காஃபி மக், அவளுக்குபிடிச்ச மியூசிக் ஆல்பம்..... இப்படி எதாச்சும் குடுத்து அசத்திட்டே இருக்கணும். பர்மா பஜார் வாங்குன ஐய்டமா இருந்தாலும், நீங்க கொடுத்ததுனா அது தனிதான்!

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 2:

உங்க கிட்ட ஒரு பைக் இல்லாட்டியும், கைல, கால்ல விழுந்தாவது அப்பாகிட்டயோ, ப்ரென்ட் கிட்டயோ ஒரு பைக்க உஷார் பண்ணிடுங்க! ஏன்னா, கார் இல்லாட்டி கூட பைக் உக்காந்துட்டு , அப்படியே ஒரு ஜாலி ரைட் போக தான் பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிக்கும். நீங்க பைக் ஓட்ற ஸ்டைல் வச்சுதான் நீங்க ஹீரோவா ஜீரோவா னு பிகர்கள் முடிவு செய்கின்றன.

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 3:

பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கிற ஆண் மகன் பெண்களின் இதயங்களை சுலபமாய் ஜெயித்து விடுவான். " உங்க அப்பாவுக்கு ஹார்ட்அட்டக்காமே! ஹே ஹே !! என்றால் நீங்கள் காலி என்று அர்த்தம். புரிதல்எதிர்பார்க்கும் பெண்களிடம், நீங்கள் தான் விட்டுகொடுத்து போக வேண்டும்!
ப்படி அவள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுத்தால் பால் எப்பவும் உங்கள்கோர்ட்டில் தான்!


பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 4:

சின்ன சின்ன குறும்புகள், செல்ல செல்ல கோபங்கள் தான் காதலுக்கு அழகு! அடிக்கடி சொல்லும் லவ் யூக்கள் உங்களின் காதலை மேலும் அழகாக்கும்! ஆகையினால் பிகர் பார்க்க போகும் போது, ஆபீஸ் வேஷத்தை கழற்றி வைத்துவிட்டு செல்லுங்கள். போன உடனே ஆரம்பிக்காமல் , அவளோடு உட்கார்ந்து பேசும்போது, உங்கள் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். நிச்சயம் நல்லதீர்வு கிடைக்கும், ஏனெனில் அவர்கள் தான் மூளையில் இருந்து யோசிப்பார்கள்!
(மாம்ஸ் ! நம்மலாம் பாக்க முரடா இருந்தாலும் சாப்ட் ஹார்டட் பெல்லாஸ்)

பிகர் மைண்டைன் பண்ணும் வழிமுறை 5 :

உங்கள் காதல் வெற்றிகரமாக இருக்க, சேர்த்து கொள்ள வேண்டியது, நம்பிக்கை, புரிதல் மற்றும் விட்டுகொடுத்தல். தவிர்க்க வேண்டியது வீண் சந்தேகம், புறக்கணிப்பு, மதிப்பு கொடுக்காதிருத்தல். இதெயெல்லாம் நீங்கள் பாலோ செய்தால் இந்த நாள் மாத்திரமல்ல, எல்லா நாளிலும் நீர் தான் காதல் மன்னன்!

பிகர் மடிக்கும் வழிமுறைகளை எழுத உதவி செய்த எல்லா சினிமாகாரர்களுக்கும் , இன்ஸ்பிரேஷனாக இருந்த சுரேஷ் கும் நன்றிகள் பல.

Inspired from www.sureshstories.blogspot.com




,

2 comments:

Vijai said...

really good ways...idhellam one time i tried..
paa.vijay yin oru padal ninaivu varugiradhu
"ada unakum enakum ellam pidikum
ennai yen pidikadhenrai"
Mani style la sonna...
"pidikumrathuku aayiram karanam irukum .....ana pidikalaingradhuku..."
BGM: ting ting ting ting ...ting ding....

Yogu said...

adanga okkamakka..semma research da..but as far i know yen da evavlo kastham padanum..irukara bachelor life a jollya ensoi pannito,kalayanatuku aparma wife a love panna vendiyadhu taan..