
அந்த இடம், கொஞ்சம் பரபரப்பாகவே காணப்பட்டது. அங்கே குழுமி இருந்த ஒரு காவலர் கூட்டத்தில் ,எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம் இருந்தது.
கமிஷனர் "முதல் தடவ, நம்ம டீம் பண்ண ஆபரேஷன் தோத்து போயிருக்கு! யாரு இதுக்கு பொறுப்பு ஏத்துக்க போறீங்க?". "நான் ஏத்துக்கறேன் சார்!", இது தேவன் ஏகாம்பரம். தமிழக போலிசின் துடிப்பான , தன் சட்டையில் மூன்று நட்சத்திரம் கொண்டிருக்கும், ஐ பி எஸ் அதிகாரி. "இனிமே என்ன பண்ண போறீங்க தேவன் ?".
அவங்க இந்த தடவ நிச்சயம் தப்பிக்க முடியாது சார், காக்கி சட்டைனா என்னனு அவங்களுக்கு காட்டாம விட மாட்டேன்!.
"Careful Devan, This Operation could fetch you more enemies!"
"Might be. But , To be an enemy , they should live at least"
...............................................................
நம்ம பண்ண போற, இந்த ஆபரேஷன் "கருடா", நம்ம போலீஸ் வாழ்க்கைல, ஏதாச்சும் சாதிச்சிருக்கோம்னு சொல்ற மாதிரி இருக்கணும். Listen to me! தேவன் ஏகாம்பரத்தின் கண்கள், ஒரு கழுகினை போல அந்த திட்டத்தின் வரைபடத்தை உற்று நோக்கின!
...............................................................
முத்துசாமி, லெப்ட்ல பாருங்க! , அந்த ஆட்டோ ஸ்டாண்ட் கிட்டதான், ஷங்கர் இருக்காரு, நீங்க பண்ண வேண்டியது, இந்த சைக்கிள்ல போய், காஸ் சிலிண்டர் சப்ளை பண்றவர் மாதிரி, அங்க நின்னுகோங்க , முரளியும், செல்வமும் உங்களுக்கு தகவல் சொல்லிட்டு இருப்பாங்க! நம்ம தேடிட்டு இருக்கிற "டேவிட்", அந்த காஸ் ஏஜென்சிக்கு , பின்னால இருக்கிற இடத்துலதான் , இருக்கான்ற இன்பர்மேஷன் நமக்கு வந்துருக்கு , அலெர்டா இருங்க !
முரளி, செல்வம் ... பொசிஷன் !!
அங்கே இருப்பவர் அனைவரின், ரத்தமும் சூடாய் இருந்தது.. தகிக்கும் வெயிலில், தேவன் ஏகாம்பரத்தின் வியர்வை , நிலத்தில் சொட்டிக்கொண்டு இருந்தது....
" "அண்ணா.... டேவிட்ணா......... போயிருங்கணா ...... போலீஸ்ணா " "
இந்த குரல் எங்கே இருந்து வந்ததோ தெரியவில்லை. அதன் பிறகு அங்கே, துப்பாக்கி சத்தமும், கூச்சலிடும் சத்தமுமே கேட்டுகொண்டிருந்தது . யாருக்கும், எதுவும் புரியவில்லை. "விஷோஊம்........."" .. முத்துசாமி, கீழே விழுந்திருந்தார்!
"சார்.... தேவன் சார் !! .......
" முத்துசாமி, முத்.....
ஒரு தோட்டா தேவனின் நெஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது!!
..............................................................
" தேவா! அப்பா ஆபிஸ்ல இருந்து வந்தாச்சு! சாப்ட வா!!"
"வந்துட்டேன் மா "...
ஸ்கூல் லீவ் விட்டாலும், விட்டுச்சு, இதுங்க தொல்ல தாங்க முடியல!! - ஒரு பெருசின் புலம்பலை பொருட்படுத்தாமல், தன் பொம்மை துப்பாகியை கீழே போட்டு விட்டு, வீட்டை நோக்கி ஓடினான் ஆறாம் வகுப்பு படிக்கும் தேவன் ஏகாம்பரம்!!
2 comments:
good da...but I was able to assume...'pasanga' padam opening ithu thaan...he he he...
அட பாவிகளா, சத்தியமா நான் இன்னும் அந்த படம் பாக்கல... ஒரு குட் நியூஸ்! I got comments from Cable Shankar for My "Kodambakkam Rayil Nilyam" Story
Post a Comment