
இன்று மாலை , என் தங்கை வீட்டுக்கு போய் விட்டு, வீடு திரும்ப , அசோக் பில்லரில் நின்று கொண்டிருந்தேன்! சென்னை பேருந்துகள், என் நேரத்துக்கு எப்போதும் வந்ததில்லை. ஒன்று நான் தாமதம், இல்லாவிட்டால் பேருந்து தாமதமாக வரும். இன்றும் அதே போல், பேருந்து ஒன்றும் இல்லை, அதனால் நின்று கொண்டிருந்தேன். அப்போது , ஒரு ஜோடி, பைக்கில் படு வேகமாக வந்து கொண்டிருந்தது. தன்னை தடுத்த காரை, லாவகமாக "சைடு" எடுத்த அந்த பைக் ஓட்டி, எதிரே வந்த ஆட்டோவை பார்க்கவில்லை. ஆனால், ஆட்டோமேலல்லாம் அவன் இடிக்க வில்லை, சாமார்த்தியமாக வண்டியை திருப்பிவிட்டான்!
ஆட்டோகாரன் சும்மா இருக்கவில்லை! "ஏண்டா, தே......யா பையா, நீ சாவ என் வண்டிதான் கெடச்சுதா?" . பைக் ஓட்டிக்கு இது பயங்கரமாய் சுட்டிருக்கவேண்டும் ! அப்படியே வண்டியை திருப்பி, ஆட்டோவிடம் வந்து, அந்த ஆட்டோகாரனை, கழுத்தை பிடித்து வெளியே இழுத்து, கீழே தள்ளி முகத்திலேயே மிதிக்க ஆரம்பித்தான். ஆட்டோகாரனும் திருப்பி அடிக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரத்தில் அங்கே கூட்டம் கூடி, ஆளாளுக்கு என்னாச்சு, என்னாச்சு என்று பேச தொடங்கினார்கள். பைக் ஓட்டி கூட வந்த பெண்ணும், கொஞ்ச நேரம் அவனை தடுத்து பார்த்தாள். பிறகு "இது வேலைக்கு ஆவாது" என்று அவளும் தூர போய் நின்று கொண்டாள். யாரோ ஒருவர் வந்து, விழுந்திருந்த பைக்கை நிமிர்த்திவைத்தார்.
என்னிடம் ஒருவர், "அங்க என்னாச்சு, 49 A பஸ் வருமா?", எனக்கு எந்த கேள்விக்கு பதில் சொல்வது என்று தெரிய வில்லை. பொதுவாக , "தெரியல சார்" என்று சொல்லி வைத்தேன்.
"என்ன மனுஷா இவாளெல்லாம், இப்படி அடிச்சுக்கறா?", ஒரு கைத்தடி என்னிடம் வருத்தப்பட்டது.
"பின்னாடி பிகர் இருந்தா இப்படி தான் சீன் போடுவானுங்க," என்று இரண்டு பேர், அங்கே இருந்தவள் தங்கையா, காதலியா என்று தெரியாமல் கூட பேசிகொண்டார்கள்!
நான் என்ன பண்ணிகொண்டிருந்தேன் என்று தானே கேட்கிறீர்கள்?
என்னுள் இருந்த "வேடிக்கை பார்க்கும்" சராசரி இந்தியனை நினைத்து கொண்டே 11 H
ஏறி வீடு வந்து சேர்ந்தேன்!

போன ஞாயிற்றுகிழமை காரில் போய் கொண்டிருந்தேன். அன்னையர் தினம் என்று எனக்கு நினைவே இல்லை. FM இல் "அம்மா" பாடல்களாகபோட்டு கொண்டிருந்தார்கள். அம்மா பாட்டு என்றால் அதிமுக பிரசார பாடல்கள் அல்ல! "அம்மா" பாட்டு, அவ்ளோதான்!
அப்போது, அன்னையர் தின வாழ்த்து சொல்ல சாலமன் பாப்பையா பேசினார்.
"எங்க அம்மா என்னைய எப்பவுமே திட்டிடே இருக்கும். எது நான் செஞ்சாலும், பாராட்டவே மாட்டாங்க! கெளவி ஏன் இப்படி செய்யுது னு நான் நெனப்பேன். ஆனா, என்னைய பத்தி மத்த ஆளுகளுங்க கிட்ட பெருமையா பேசும். அவிக சொல்றது கேட்டு சந்தோச படுமாம். அந்த ஆளுக சொல்ல நான் கேட்டுருக்கேன். படிப்பறிவு இல்லாத பொம்பளைக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சுனு தெரியல. எங்க தன் பையன் பெரும பேசுனா தலைகனம் ஏறிடும்னுதான், இந்த மனுசி பேசலயோ என்னவோ,", அவர் வட்டார வழக்கில் பேச பேச , எனக்கு லேசாய் என் அம்மா ஞாபகம் வந்தது. ஆனால் என் அம்மா , நான் சிரித்தால் சிரிப்பாள், நான் அழுதால் அழுவாள். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது, ஸ்கூலில் படிக்கும் போது. நான் எந்த போட்டியில் பங்கு பெற்றாலும், என் அம்மா அங்கே இருக்க வேண்டும். அதுவும், ஆரஞ்சு புடவையில் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் வேண்டும் என்றே தோற்று விடுவேன். இதற்காகவே, என் அம்மா வருவாள். என்னை பார்த்த படியே பெருமையாய் அமர்ந்திருப்பாள்.
எங்கோ படித்த ஞாபகம், "அம்மாவை கடவுளாக பார்க்கலாமா?". பதில், இவ்வாறாக இருந்தது." அம்மா என்பவள் முதன்மையாக அன்பு செலுத்தவேண்டிய ஜீவனே அன்றி , கடவுள் அல்ல" என்று.
என் பார்வையில், இதற்கொரு சிறிய விளக்கம். ஆணின் உயிர்த்துளியை தாங்கி, நம் கண், காது, இதயம், பிறப்புறுப்பு , இன்ன பிற இத்யாதிகள் உருவாக துணைபுரிந்து, ஈன்றெடுத்து, படைப்பின் மொத்த சாராம்சமாய் விளங்குபவள் அம்மா! அவள் மீது அன்பு செலுத்துதல் என்று சுலபமாய் சொல்லி விட்டு போக முடியாது. உன் வீட்டு நாய்க்கு கூடத்தான் நீ அன்பு செலுத்தலாம். ஆனால் ? அம்மா ?
உன்னை உருவாக்கியவளை, நீ உன் காலில் நிற்கும் வரை பாதுகாத்தவளை, அன்பு மட்டும் செலுத்தினால் போதாது. உன்னை கண்ணாய்பார்த்துகொண்டவளை, நீ கண்ணாடியாயாவது பார்த்துக்கொள்ள வேண்டாமா ?
முடிந்த வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !

என்ன அநியாயம்யா இது, ஓட்டு போட பணம் குடுத்துட்டு, நீ எனக்கு தான் ஓட்டு போடணும்னு மிரட்டறானுங்க!, இவனுங்கள எல்லாம் தூக்குல போடணும் சார் !
எப்படி புஷ் , சதாம் உசேன தூக்குல போட்டரோ, அந்த மாதிரி ஒபாமா வந்து இவனுங்கள புடிச்சி தூக்குல போடணும் !
இப்ப பாத்தீங்கன்னா , அந்த காலத்துல சிவாஜி கூட நின்னாரு, எம்ஜார எதுத்து ஒரு ஓட்டு வாங்க முடிஞ்சுதா? அதுக்கு எல்லாம் , நல்ல மனசு வேணும்ங்க! இப்ப பாருங்க இந்த விஜயகாந்த், இவன்லாம் என்ன பண்ண போறான் ? பத்து எடத்துல நின்னு தோத்துத்தான் போக போறோம் னு தெரிஞ்சும், ஒண்ணு, ரெண்டு ஓட்டுக்காக எதுக்கு நிக்கணும்ங்கறேன்?
பஸ்ஸு டிகெட்டு விலைய இவனுங்க பாட்டுக்கு ஏத்திடறானுங்க , காய் கறி வெலையெல்லாம் தாறுமாறா ஏறுது! என்ன நடக்குது சார் இங்க ? இந்த கருணாநிதி ஆட்சிலாம் ஆட்சியா ?
நிறுத்துக..........
இதெல்லாம் நான் கேட்டது சென்னை மாநகர பேருந்து ஒன்றில்.
அய்யா, அரசியல் பேசும் புண்ணியவான்களே! நீங்கள் உங்கள் நண்பர் ஜமாவிலோ, அல்லது உங்களுகென்று இருக்கும் விவாத கூட்டத்திலோ இதெல்லாம் பேசுங்கள்! மக்கள் கூடும் பொது இடங்களில் வேண்டாமே ப்ளீஸ்! உங்கள் கருத்தை ஒத்த சிந்தனை கொண்டவராக இருந்தால், பிரச்சனை இல்லை, மாற்று கருத்து கொண்டவர் உங்களுடன் பயணம் செய்தால் ??
அதனால், இடம் பொருள் ஏவல் அறிந்து அரசியல் பேசவும் . இது தேர்தல் சீசன் வேறு! வருகிறவன் போகிறவன் எல்லாம் அடிப்பான். கடைசியில் வடிவேல் மாதிரி 'அம்மே , அம்மே !' என்று முனகி கொண்டிருக்க வேண்டியதுதான்!

சந்தேக சதாசிவம் : எல்லாம் சரி! ஒபாமாவுக்கும் நம்மூர் உள்ளூர் தேர்தலுக்கும் என்ன சம்பந்தம்? அவர எல்லாம் கூட்டிட்டு வந்து எதுக்கு இதுக்குள்ள இழுக்கணும்?
நம்மாட்களில் பல பேர் இப்படித்தான்.. பத்து பேர் கூட இருந்தால் என்ன ஏது என்று கேட்காமல் கூட, "தட்னா தாராய்டுவ" என்று டயலாக் பேசுவார்கள். அவர்கள் உண்மையில் எப்படி என்றால் இப்படித்தான்!!!
இந்த வீர செயலின் விளைவு தெரியுமா ????
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.................................................... இங்கே ..............................................................

என்னா அடி!! பில்டிங் ஸ்ட்ராங்!! பேஸ்மென்ட் வீக் !!
இப்படி உசுபேத்தி , உசுபேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிடீங்களே டா !
இதை பார்த்து சிரித்து கொண்டாலும், விளையாட வேண்டிய வயது வன்முறையில் இறங்குவதை பார்த்தால் நெஞ்சு பதறுகிறது!!
சிரித்து விட்டு சிந்தியுங்கள் !!