Tuesday, May 12, 2009

அம்மா என்றழைக்காத !



போன ஞாயிற்றுகிழமை காரில் போய் கொண்டிருந்தேன். அன்னையர் தினம் என்று எனக்கு நினைவே இல்லை. FM இல் "அம்மா" பாடல்களாகபோட்டு கொண்டிருந்தார்கள். அம்மா பாட்டு என்றால் அதிமுக பிரசார பாடல்கள் அல்ல! "அம்மா" பாட்டு, அவ்ளோதான்!

அப்போது
, அன்னையர் தின வாழ்த்து சொல்ல சாலமன் பாப்பையா பேசினார்.
"எங்க அம்மா என்னைய எப்பவுமே திட்டிடே இருக்கும். எது நான் செஞ்சாலும், பாராட்டவே மாட்டாங்க! கெளவி ஏன் இப்படி செய்யுது
னு நான் நெனப்பேன். ஆனா, என்னைய பத்தி மத்த ஆளுகளுங்க கிட்ட பெருமையா பேசும். அவிக சொல்றது கேட்டு சந்தோச படுமாம். அந்த ஆளுக சொல்ல நான் கேட்டுருக்கேன். படிப்பறிவு இல்லாத பொம்பளைக்கு எப்படி இதெல்லாம் தோணுச்சுனு தெரியல. எங்க தன் பையன் பெரும பேசுனா தலைகனம் ஏறிடும்னுதான், இந்த மனுசி பேசலயோ என்னவோ,", அவர் வட்டார வழக்கில் பேச பேச , எனக்கு லேசாய் என் அம்மா ஞாபகம் வந்தது. ஆனால் என் அம்மா , நான் சிரித்தால் சிரிப்பாள், நான் அழுதால் அழுவாள். எனக்கு ஒரு பழக்கம் இருந்தது, ஸ்கூலில் படிக்கும் போது. நான் எந்த போட்டியில் பங்கு பெற்றாலும், என் அம்மா அங்கே இருக்க வேண்டும். அதுவும், ஆரஞ்சு புடவையில் தான் வர வேண்டும். இல்லாவிட்டால் நான் வேண்டும் என்றே தோற்று விடுவேன். இதற்காகவே, என் அம்மா வருவாள். என்னை பார்த்த படியே பெருமையாய் அமர்ந்திருப்பாள்.

எங்கோ
படித்த ஞாபகம், "அம்மாவை கடவுளாக பார்க்கலாமா?". பதில், இவ்வாறாக இருந்தது." அம்மா என்பவள் முதன்மையாக அன்பு செலுத்தவேண்டிய ஜீவனே அன்றி , கடவுள் அல்ல" என்று.

என் பார்வையில், இதற்கொரு சிறிய விளக்கம். ஆணின் உயிர்த்துளியை தாங்கி, நம் கண், காது, இதயம், பிறப்புறுப்பு , இன்ன பிற இத்யாதிகள் உருவாக துணைபுரிந்து, ஈன்றெடுத்து, படைப்பின் மொத்த சாராம்சமாய் விளங்குபவள் அம்மா! அவள் மீது அன்பு செலுத்துதல் என்று சுலபமாய் சொல்லி விட்டு போக முடியாது.
உன் வீட்டு நாய்க்கு கூடத்தான் நீ அன்பு செலுத்தலாம். ஆனால் ? அம்மா ?

உன்னை உருவாக்கியவளை, நீ உன் காலில் நிற்கும் வரை பாதுகாத்தவளை, அன்பு மட்டும் செலுத்தினால் போதாது. உன்னை கண்ணாய்பார்த்துகொண்டவளை, நீ கண்ணாடியாயாவது பார்த்துக்கொள்ள வேண்டாமா ?

முடிந்த
வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !



2 comments:

Baby ஆனந்தன் said...

Philosophya pottu thaakuriye en ippadi?

anyways good nanba...i love my mom :)

கோவி.கண்ணன் said...

//முடிந்த வரை அம்மா கூட இருங்கள்! வேலை, படிப்பு இன்னபிற காரணங்கள்இருந்தாலும், அடிக்கடியாவது அம்மோவோடு பேசுங்கள்! அவள் அன்பு நம் அனைவருக்கும் வாழ்த்துக்களாகத்தான் என்றும் இருக்கும் !
//

திருமணம் ஆகாதவங்க எளிமையாக சொல்லிடுவிங்க. பண்ணிப் பாருங்க அப்பறம் தெரியும்.
:)